ஆக்சிஜன் வினியோகத்திற்கு தேசியளவிலான திட்டம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து மற்றும் தடுப்பூசி முறைகள் தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.இந்தியாவில், கொரோனாவின 2வது அலை வீசி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக
உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட், ஆக்சிஜன், தடுப்பூசி

புதுடில்லி: ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து மற்றும் தடுப்பூசி முறைகள் தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியாவில், கொரோனாவின 2வது அலை வீசி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டில்லி, பாம்டே, சிக்கிம், ம.பி., கோல்கட்டா, அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.


latest tamil news



இந்நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ளதாவது: 6 உயர் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் நாங்கள் கண்டறிந்த சில முக்கியமான பிரச்னைகளை நாங்கள் விசாரிக்க உள்ளோம். உயர்நீதிமன்றங்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்டு செயல்பட்டாலும், குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்து விநியோகம், தடுப்பூசி முறை ஆகியவை தொடர்பாக தேசிய அளவிலான திட்டத்தை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதனை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN K - East Tambaram, Chennai,இந்தியா
22-ஏப்-202122:05:47 IST Report Abuse
RAMAKRISHNAN K தரத்தை தாழ்த்த வேண்டாம்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
22-ஏப்-202121:17:20 IST Report Abuse
Murthy கேவலமா நீதிமன்றம் ஆளும் அரசை திட்டியுள்ளது........
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
22-ஏப்-202119:00:55 IST Report Abuse
S Bala ஏன், வேலை இல்லாத ரிட்டயர்டு ஆன ஜட்ஜ் யாரும் இல்லையா? அவர்களை வைத்து ஒரு கமிஷன் போடலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X