டில்லிக்கு தேவையான ஆக்சிஜன் முழுவதையும் வழங்கிடுக: மத்திய அரசுக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் பெரும்பாலான டில்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முழுவதையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடால் நோயாளிகள் பெரிதும்
FullQuota, Oxygen, Delhi, Ensure Tanker Safety, Delhi HighCourt,Centre

புதுடில்லி: கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் பெரும்பாலான டில்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முழுவதையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. டில்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் தேவைக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது. மேலும், நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள் என்றும் மத்திய அரசை காட்டமாக டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.


latest tamil news


ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான மற்றொரு வழக்கை இன்று டில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வாதிடுகையில், ‛ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை டில்லி அரசு எங்களிடம் கொடுத்திருந்தால், நாங்கள் வினியோகம் செய்திருப்போம். எங்களுக்கும் இது குறித்த கவலைகள் உள்ளன. டில்லி அரசு குறைகளை மட்டுமே கூற விரும்பினால் எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இது பரபரப்பாக்க வேண்டிய விஷயமல்ல. அவசர தேவையுள்ள மருத்துவமனை பட்டியலை டில்லி அரசு எங்களுக்கு வழங்கியிருக்கலாம்' என வாதிட்டது.


latest tamil news


விசாரணையின் முடிவில், மத்திய அரசு டில்லிக்கு தேவையான முழு அளவிலான ஆக்சிஜனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ‛ஆக்சிஜன் பற்றாக்குறை, பெரிய அளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே, டில்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெறுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஏப்-202100:53:08 IST Report Abuse
Pugazh V கேஜ்ரிவால் அவர்களிடம் தோற்றுப் போன கோபத்தை பாஜக டெல்லி மக்கள் மீது காட்ட இதுவா சந்தர்ப்பம்? இப்படி யா பாரபட்சமாக மத்திய அரசு நடந்து கொள்வது? டெல்லி நீதிமன்றம் சரியான முறையில் மத்திய அரசு க்கு உத்தரவிட்டிருக்கிறது.
Rate this:
Cancel
22-ஏப்-202123:44:06 IST Report Abuse
ஆப்பு கோர்ட் உத்தரவு போட்டாத்தான் கிடைக்கும். இல்லேன்னா மத்திய அரசு குடுக்காது. பழியை மட்டும் கெஜ்ரி மேலே போட்டுருவாங்க.
Rate this:
Cancel
m.n.balasubramani - TIRUPUR,இந்தியா
22-ஏப்-202122:19:20 IST Report Abuse
m.n.balasubramani ok then where we will go. The court has got his own fear.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X