காணக்கிடைக்காத மூக்கையாவின் படைப்புகள்| Dinamalar

காணக்கிடைக்காத மூக்கையாவின் படைப்புகள்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (1)
டி.ஆர்.பி.மூக்கையாஅற்புதமான சிற்பக்கலைஞர் அருமையான ஒவியர்.நாட்டில் உள்ள பல அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பதே இவரது திறமைக்கு சான்று.சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக்கல்லுாரியில் கிரானைட் கல்லில் இவர் உருவாக்கியுள்ள சிற்பம்தான் இப்போதும் பிரதானமாக நின்று வரவேற்றுக் கொண்டு இருக்கிறது.கலைச்செம்மல்



latest tamil news




டி.ஆர்.பி.மூக்கையா
அற்புதமான சிற்பக்கலைஞர் அருமையான ஒவியர்.


latest tamil news


நாட்டில் உள்ள பல அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் நிரந்தரமாக வைக்கப்பட்டிருப்பதே இவரது திறமைக்கு சான்று.


latest tamil news


Advertisement

சென்னை அடையாறில் உள்ள அரசு இசைக்கல்லுாரியில் கிரானைட் கல்லில் இவர் உருவாக்கியுள்ள சிற்பம்தான் இப்போதும் பிரதானமாக நின்று வரவேற்றுக் கொண்டு இருக்கிறது.


latest tamil news


கலைச்செம்மல் விருது உள்ளீட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவரும்,நிறைய மாணாக்கர்களை உருவாக்கியவருமான மூக்கையா தற்போது உயிருடன் இல்லை.


latest tamil news


ஆனால் இவரது படைப்புகள் இப்போதும் உயிரோட்டமாய் இருந்து அவரது புகழை சொல்லிக்கொண்டு இருக்கிறது.


latest tamil news


வீட்டிற்குள் இருக்கும் அவரது படைப்புகள் மக்கள் மத்தியில் பார்வைக்கு வரட்டும் என்ற நல்ல நோக்கோடு அவரது குடும்பத்தார் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ‛தட்சிண்சித்ரா' என்ற பராம்பரிய கலைக்கூடத்திற்கு நன்கொடையாக வழங்கிவிட்டனர்.


latest tamil news


அந்த படைப்புகள் தற்போது கண்காட்சியாக தட்சிண்சித்ராவில் வைக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கண்காட்சி பற்றிக் கேள்விப்பட்ட பழநியப்பன்,ராமசுரேஷ்,அஷ்வின் ராஜகோபால் ஆகியோர் தங்களிடம் உள்ள மூக்கையாவின் படைப்புகளை வழங்கி கண்காட்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.கண்காட்சி மே 31 ந்தேதி வரை நடைபெறும்.


latest tamil news


-எல்.முருகராஜ்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X