மஹாராஷ்டிர அரசை திட்டித் தீர்த்த மும்பை உயர் நீதிமன்றம்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
நாக்பூர்: 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை நாக்பூர் கொரோனா மருத்துவமனைக்கு விநியோகிக்க உத்தரவிட்டும், மஹா., அரசு நிறைவேற்றாததால், இந்த மோசமான சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வெட்கப்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் அதிருப்தி தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி பரவலாக

நாக்பூர்: 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை நாக்பூர் கொரோனா மருத்துவமனைக்கு விநியோகிக்க உத்தரவிட்டும், மஹா., அரசு நிறைவேற்றாததால், இந்த மோசமான சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு வெட்கப்படுவதாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் அதிருப்தி தெரிவித்துள்ளது.latest tamil newsமஹாராஷ்டிரா மாநிலம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி பரவலாக பல்வேறு நகரங்களும் இரண்டாம் அலையால் சிக்கலை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தான் நாக்பூரில் உள்ள கொரோனா மருத்துவமனைக்கு போதுமான மருந்துகள் வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச், 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி விநியோகிக்கும் படி உத்தரவிட்டது. ஆனால் அதனை நாக்பூர் அதிகாரிகள் நிறைவேற்றவில்லை.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மஹா., அரசையும், அதிகாரிகளையும் நீதிபதிகள் திட்டி தீர்த்தனர். நீதிபதிகள் எஸ்.பி.சுக்ரே மற்றும் எஸ்.எம்.மோடக் பெஞ்ச் கூறியதாவது: உங்களைப் நினைத்து நீங்கள் வெட்கப்படாவிட்டால், இந்த மோசமான சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து நாங்கள் வெட்கப்பட வேண்டியிருக்கும். மகாராஷ்டிராவின் பரிதாபகரமான நோயாளிகளுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது நோயாளிகளை நீங்கள் அலட்சியப்படுத்துகிறீர்கள், புறக்கணிக்கிறீர்கள். நாங்கள் ஒரு தீர்வு சொன்னால் அதை பின்பற்றுவதில்லை. என்ன அபத்தம் நடக்கிறது இங்கே.


latest tamil newsஉயிர் காக்கும் மருந்து கிடைக்காதது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். இந்த அதிகாரிகள் பொறுப்புகளை தட்டிக்கழிக்கிறார்கள் என்பது தற்போது தெளிவாகியுள்ளது. இருப்பு இருக்கிறது. ஆனால் நாக்பூருக்கு இல்லை. தானே எவ்வாறு அதிக மருந்துகளை பெறுகிறது. எங்களின் உத்தரவு உங்களுக்கு மருந்துகளை வாங்குவதற்கு உதவியிருக்கும். ஆனால் நீங்கள் அரசின் செயலுக்கு வாதாடுகிறீர்கள். மும்பை அதிகாரிகளுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள். நாக்பூர் மக்களை விட்டுவீட்டர்கள். என விளாசினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sambath kumar - pondicherry,இந்தியா
23-ஏப்-202109:05:15 IST Report Abuse
sambath kumar First the judicial give judgement in time-taking more than 10 years in every case-instead of blaming others do your duty first-
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
23-ஏப்-202108:02:09 IST Report Abuse
Rajasekaran மகாராஷ்டிரா மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக நிலவிவரும் விக்கினங்களை அந்த சித்தி விநாயகர் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்
Rate this:
Cancel
23-ஏப்-202104:37:12 IST Report Abuse
உன்னை போல் ஒருவன் Gee y
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X