பொது செய்தி

இந்தியா

அமர்நாத் பயணம் முன்பதிவு நிறுத்தம்

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீநகர் :கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, 'ஆன்லைன்'
 அமர்நாத்,முன்பதிவு, நிறுத்தம்

ஸ்ரீநகர் :கொரோனா தொற்று பரவல் காரணமாக, அமர்நாத் பனிலிங்க கோவில் புனிதப் பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமய மலையில், 12 ஆயிரத்து, 730 அடி உயரத்தில், அமர்நாத் பனிலிங்க குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கு இணையதளம் வாயிலாக, 'ஆன்லைன்' முன்பதிவுகள் செய்யப்படுவது வழக்கம்.


latest tamil news




இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம், வரும், ஜூன், 28ல் துவங்கி, ஆகஸ்ட், 22 வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது.இதற்கான முன்பதிவுகள், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகள் மற்றும், 'ஆன்லைன்' வாயிலாக, சமீபத்தில் துவங்கியது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அமர்நாத் பனிலிங்க புனித பயணத்துக்கான முன்பதிவு, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்தது.'நிலைமை கட்டுக்குள் வந்த பின், முன்பதிவு மீண்டும் துவங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202108:29:31 IST Report Abuse
தல புராணம் என்ன அவசரம்? அங்கேயும் லட்சம் பேரை கூட்டி வைத்து கும்மாளம் போட்டு, அங்கேயே தங்கி, காரியம் பண்ணி, அஸ்தியை கைலாசத்திலேயே கரைச்சிட்டு வந்திருக்கலாமே..
Rate this:
Cancel
22-ஏப்-202123:25:22 IST Report Abuse
ஆப்பு ஏன் அங்கேயும் கொஞ்சம் பரப்பி உட வேண்டியது தானே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X