பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஏப் 22, 2021
Share
Advertisement
ஏப்., 23, 1992 மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1921 மே, 2ம் தேதி பிறந்தவர், சத்யஜித் ரே. சாந்தி நிகேதன் பல்கலையில் ஓவியம் கற்றவர், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தார்.நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 'டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்தார். பூபதி பூஷனின், பதேர் பாஞ்சாலி நாவலை படமாக்க, தன் சொத்து மற்றும் மனைவியின் நகையை விற்றார்.

இதே நாளில் அன்று


ஏப்., 23, 1992



மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1921 மே, 2ம் தேதி பிறந்தவர், சத்யஜித் ரே. சாந்தி நிகேதன் பல்கலையில் ஓவியம் கற்றவர், விளம்பர நிறுவனங்களில் பணிபுரிந்தார்.நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 'டிஸ்கவரி ஆப் இந்தியா' புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்தார். பூபதி பூஷனின், பதேர் பாஞ்சாலி நாவலை படமாக்க, தன் சொத்து மற்றும் மனைவியின் நகையை விற்றார். இவரது இயக்கத்தில், மூன்று ஆண்டுகள் உருவான இப்படம், 1955ல் வெளியானது. உலகின் தலைசிறந்த படங்களில் ஒன்றாக, பதேர் பாஞ்சாலி இருக்கிறது.மொத்தம், 36 படங்கள் இயக்கியுள்ளார். 'வெனிஸ் தங்கச் சிங்கம், பெர்லின் வெள்ளிக்கரடி,
தேசிய வெண்தாமரை, பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா' உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். 1992 ஏப்., 23ம் தேதி, தன், 71வது வயதில் இயற்கை எய்தினார். 'இந்திய திரையுலக மேதை' சத்யஜித் ரே காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X