வெற்றுப் பேச்சு வேண்டாம்!

Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெற்றுப் பேச்சு வேண்டாம்!நம் நாடு, நெருக்கடியான நிலையில் இருப்பதற்கு கொரோனா தொற்று பரவல் மட்டும் காரணமல்ல. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு கொள்கையும், அதற்கு காரணமாக உள்ளது. போலியான கொண்டாட்டங்ளையும், வெற்றுப் பேச்சுகளையும் தவிர்த்துவிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண, இந்த அரசு முயற்சிக்க வேண்டும்.ராகுல்எம்.பி., - காங்கிரஸ்துரித நடவடிக்கை!மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி
வெற்றுப் பேச்சு வேண்டாம்!

வெற்றுப் பேச்சு வேண்டாம்!

நம் நாடு, நெருக்கடியான நிலையில் இருப்பதற்கு கொரோனா தொற்று பரவல் மட்டும் காரணமல்ல. மத்திய அரசின் மக்கள் எதிர்ப்பு கொள்கையும், அதற்கு காரணமாக உள்ளது. போலியான கொண்டாட்டங்ளையும், வெற்றுப் பேச்சுகளையும் தவிர்த்துவிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண, இந்த அரசு முயற்சிக்க வேண்டும்.

ராகுல்

எம்.பி., - காங்கிரஸ்

துரித நடவடிக்கை!

மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்கள், 24 மணி நேரம் செயல்படவும், மத்திய அரசு துரித நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 'ரெம்டெசிவர்' மருந்துகளின் தயாரிப்பை, மாதம் ஒன்றுக்கு, 36 லட்சம் குப்பிகளில் இருந்து, 78 லட்சம் குப்பிகளாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிர்மலா சீதராமன்

மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,

ஒன்றிணைந்து செயல்படுவோம்!

உலகம் வெப்ப மயமாவது, ஓசோன் அடுக்குகள் குறைவது போன்ற மாற்றங்களை எதிர்கொள்ள, ஒரு சில நாடுகள் அல்லது அமைப்புகளால் முடியாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். சர்வதேச பொறுப்புணர்வு அனைவருக்கும் தேவை என்பது குறித்து, இந்த பூமி, நமக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதை அனைவரும் உணர வேண்டும்.

தலாய் லாமா

திபெத் மதகுரு

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Pune,இந்தியா
24-ஏப்-202110:12:30 IST Report Abuse
Karthik Is there any law available in India to ban political leader misguiding people in the name of opposing government initiatives? If not, such law should be d to stop people and advice them to practice what they preach to others.
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
23-ஏப்-202111:57:38 IST Report Abuse
Rajasekaran இந்திய திருநாட்டில் எப்போதும் காணாத அளவிற்கு ஒரு பொது நலன் சார்ந்த எமர்ஜென்சி நிலவி வரும் நிலையில் தினந்தோறும் வெற்றுப்பேச்சு பேசி அரசுக்கு ஒரு வித ஒத்துழைப்பும் தராமல், எதற்கெடுத்தாலும் குறை காண்பதிலேயே நேரத்தை கழிக்கும் சிலர் , “வெற்றுப்பேச்சு வேண்டாம் “ என்று கூறுவது , சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X