ரூ.1.8 கோடி கள்ளநோட்டு கோவையில் இருவர் கைது

Added : ஏப் 22, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:கோவையில், 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார், அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர். கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில், சமீபத்தில், 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு,
 ரூ.1.8 கோடி கள்ளநோட்டு கோவையில் இருவர் கைது

திருவனந்தபுரம்:கோவையில், 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய கேரள போலீசார், அதை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொச்சி அருகேயுள்ள உதயம் பேரூரில், சமீபத்தில், 95 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு கள்ளநோட்டு வைத்திருந்த பிரியன் லால் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.ஐ., சுனேக் தலைமையில், ஐந்து போலீசார், நேற்று இரவு, கோவை கரும்புக்கடை, வள்ளல் நகருக்கு வந்தனர்.

அங்கு அஷ்ரப் அலி, 29, என்பவரின் வீட்டிற்குச் சென்றனர். அங்கிருந்த அஷ்ரப் அலியிடமிருந்து, நான்கு, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செயயப்பட்டன.தொடர்ந்து அஷ்ரப் அலியுடன், தெற்கு உக்கடம், அல்- அமீன் காலனியிலுள்ள பானி பூரி வியாபாரி சையது சுல்தான், 32, வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கின.இருவரையும் கைது செய்த போலீசார், கேரளா அழைத்துச் சென்றனர். கேரள போலீசாரின் அதிரடி ரெய்டும், கத்தை கத்தையாக கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதும், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X