பொது செய்தி

இந்தியா

யெச்சூரி மகன் ஆஷிஷ் கொரோனாவுக்கு பலி

Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மகனும், பத்திரிகையாளருமான ஆஷிஷ் யெச்சூரி,35, கொரோனா பாதிப்பால், காலமானார்.மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திராணி மசூம்தார் தம்பதியின் மகனான, ஆஷிஷ், சென்னையில், 'ஏஷியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' கல்லுாரியில் பயின்றவர்.பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம்,
 யெச்சூரி மகன் ஆஷிஷ் கொரோனாவுக்கு பலி

புதுடில்லி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியின் மகனும், பத்திரிகையாளருமான ஆஷிஷ் யெச்சூரி,35, கொரோனா பாதிப்பால், காலமானார்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திராணி மசூம்தார் தம்பதியின் மகனான, ஆஷிஷ், சென்னையில், 'ஏஷியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம்' கல்லுாரியில் பயின்றவர்.பல பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் வசித்து வந்த இவர், இரு வாரங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ஹரியானா மாநிலம், கூர்கானில் உள்ள மெடன்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு, சுவாதி என்ற மனைவி உள்ளார். மகன் மரணச் செய்தியை சோகத்துடன், 'டுவிட்டரில்' பதிவிட்ட, சீதாராம் யெச்சூரி, சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆஷிஷ் மரணத்திற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்., தலைவர்கள் சோனியா, ராகுல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இளம் வயதுள்ள ஆஷிஷ், கொரோனாவுக்கு பலியாகி இருப்பது, அரசியல் மற்றும் பத்திரிகை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
25-ஏப்-202116:17:36 IST Report Abuse
Jayvee கொரோன இன்னும் பல நல்ல காரியங்கள் செய்யவேண்டியுள்ளது இது போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X