அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பிரதமரிடம் சோனியா வலியுறுத்தல்

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (9+ 34)
Share
Advertisement
புதுடில்லி:''நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி போட வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துஉள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, 18 - 45 வயதுடையவர்களுக்கும், இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கடமையிலிருந்து விலகச் செய்துள்ளது.
 இலவச தடுப்பூசி, பிரதமர், சோனியா, வலியுறுத்தல்

புதுடில்லி:''நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி போட வேண்டும்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துஉள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை, 18 - 45 வயதுடையவர்களுக்கும், இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கடமையிலிருந்து விலகச் செய்துள்ளது.


பாரபட்சம்இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை, மத்திய அரசு கைவிட்டு உள்ளது. பொருளாதார சூழ்நிலையை கருதி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். கடந்த ஆண்டில், கடுமையான பாடங்களை கற்றும், மக்கள் அடைந்த வேதனை களை பார்த்த பின்னும், மத்திய அரசு, பாரபட்சமான, தன்னிச்சையான கொள்கையை பின்பற்றுகிறது.

இதன் விளைவாக, 'கோவிஷீல்டு மருந்தின் ஒரு, 'டோஸ்' மத்திய அரசுக்கு, 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு, 400 ரூபாய்க்கும், தனியாருக்கு, 600 ரூபாய்க்கும் விற்கப்படும்' என, 'சீரம் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒதுக்கீடுஇதனால், தடுப்பூசிக்கு மக்கள் அதிக பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநில அரசுகளுக்கு, மேலும் சுமை அதிகரிக்கப் பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தின் தடுப்பூசிக்கு, மூன்று விதமான விலையை எப்படி நிர்ணயிக்க முடியும்? கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், துயரங்களில் இருக்கும் மக்களிடம் லாபம் சம்பாதிக்க, அந்நிறுவனத்தை, மத்திய அரசு அனுமதிக்கிறதா?

மத்திய அரசு, தங்களுக்கு கிடைக்கும், 50 சதவீத தடுப்பு மருந்துகளை, கூட்டாட்சி தத்துவத்தை மனதில் வைத்து, மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இதே கருத்தை வலியுறுத்தி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9+ 34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
24-ஏப்-202118:45:24 IST Report Abuse
bal ஆமாப்பா நம்ப வரி பணத்துலேர்ந்து இலவசமா கொடுக்கலயாம். இந்த சோனியா சொத்திலிருந்து திட்டத்துக்கு பணம் கொடுப்பார்களாம்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஏப்-202120:35:55 IST Report Abuse
Endrum Indian தாய் எவ்வழியோ அதே மகனும் மகளும் மிக மிக உதாரண குடும்பம் இது???இதெல்லாம் வருவது நமது ஜல்லடை ஓட்டை சட்டத்தினால் தான்???நான் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் எல்லாவற்றையும் உடைப்பில் போட்டுவிட்டு "தவறு கண்டேன் சுட்டேன்" இந்த ஒரு சட்டம் தான் எல்லாவற்றிற்கும் என்று சொல்லியிருப்பேன். எங்கே தன் பெயர் மீடியாவில் விட்டுப்போய் விடுமோ என்று உளறுவதே இவர்கள் வாடிக்கையாக போய் விட்டது.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-ஏப்-202111:51:31 IST Report Abuse
கொக்கி குமாரு ஒவ்வொரு குடும்பமும் மாதம் மாதம் கேபிள் டிவிக்கு 250 ரூபாய் செலவழிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் பக்கத்து தெருவில் இருக்கும் கடைக்கு பைக் எடுத்து சென்று காய்கறி வாங்க பெட்ரோலுக்கு 1000 ரூபாய் செலவழிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் வீட்டில் ஏர் கூலரோ ஏசியோ வாங்க பணம் செலவழிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒரு சினிமா பார்க்க செலவழிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் டாஸ்மாக்கிற்கு மாதம் 500 ரூபாயாவது செலவழிக்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் வேலை வெட்டி ஏதும் செய்யாமல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து அரசிடம் சம்பளம் வாங்க முடிகிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணிநேரம் மட்டும் எங்காவது வேலை செய்து 500 ரூபாயை கூலியாக பிடுங்க முடிகிறது. ஆனால் தடுப்பூசிக்கு 400 ரூபாய் செலவழிக்க ஒவ்வொரு குடும்பத்தாலும் முடியவில்லை. விளங்கிடும். பின் குறிப்பு: வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு இலவச தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருக்கிறது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பதிவிற்கு ஏதெனும் பதில் எழுதி பிதற்றலாம்....
Rate this:
Kumar Kandasamy - Hosur,இந்தியா
23-ஏப்-202113:41:14 IST Report Abuse
Kumar Kandasamyநன்றி.... சரியான கருத்து........
Rate this:
enkeyem - sathy,இந்தியா
23-ஏப்-202116:54:36 IST Report Abuse
enkeyemஅரசு மருத்துவமனைகளில் வறுமைக்கோட்டுக்கு மேல், கீழ் என்ற பாகுபாடுகள் இல்லை. அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகவே வழங்கப்படுகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X