கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
புதுடில்லி: 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, மத்திய அரசிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்சிஜன் சப்ளைக்கு தேசிய திட்டம் உண்டா; பொது முடக்கம் அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?' என்றும் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து, இன்று முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது
கொரோனா,கட்டுப்படுத்த, நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட் கேள்வி!

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என, மத்திய அரசிடம், உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆக்சிஜன் சப்ளைக்கு தேசிய திட்டம் உண்டா; பொது முடக்கம் அறிவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?' என்றும் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து, இன்று முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில், ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட் டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது.


பல்வேறு பிரச்னைகள்
'பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது திருடுங்கள். ஆக்சிஜன் இல்லாமல் உயிர் போனதாக ஒரு செய்தி கூட வரக் கூடாது' என, கூறியது.பிரச்னை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கிறது. தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், எல்.என்.ராவ், எஸ்.ஆர்.பட் அடங்கிய அமர்வு, இதை விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையின்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் முறைகளில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்த, அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க உள்ளோம்.தற்போதைக்கு, டில்லி, மும்பை, சிக்கிம், மத்திய பிரதேசம், கோல்கட்டா மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றங்களில், இது தொடர்பாக பல பிரச்னைகளை முன் வைத்து, வழக்குகள் உள்ளன.அதிகாரம்இந்த நீதிமன்றங்கள், அந்தந்த மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில் வைத்து, விசாரித்து வருகின்றன.அந்த மாநிலத்துக்கான முன்னுரிமைகளின் அடிப்படையில், உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதனால், குழப்பம் ஏற்படுவதுடன், ஆதாரங்களை பகிர்ந்து கொள்வதில் பிரச்னை ஏற்படுகிறது.மேலும், ஊரடங்கைப் பிறப்பிக்க சில நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. சட்டத்துக்கு உட்பட்டு, அதற்கான அதிகாரம் நீதிமன்றங் களுக்கு உள்ளதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.


பதில் மனுக்கள்இந்த விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவும், 'அமிகஸ் கியூரி'யாக செயல்படும்படி, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேயின் உதவியை நாடியுள்ளோம்.நான்கு முக்கிய பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆக்சிஜன் வினியோகம், அத்தியாவசிய மருந்துகள் வினியோகம், தடுப்பூசி வழங்கும் முறைகள் குறித்து விசாரிக்க உள்ளோம்.
அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப, ஊரடங்கு உத்தரவை பிறக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றங்களுக்கு இருக்க வேண்டும் என கருதுகிறோம். சட்டத்துக்கு உட்பட்டு, அந்த உத்தரவை உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியுமா என்பது குறித்தும் விசாரிக்க உள்ளோம்.
இந்த நான்கு பிரச்னைகள் குறித்த தேசிய கொள்கையை, மத்திய அரசு இன்று அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

''இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கும், பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டுமா?'' என, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேள்வி எழுப்பினார்.
'தற்போதைக்கு பதில் மனுக்களை தாக்கல் செய்யுங்கள். சில முக்கியமான பிரச்னைகள் தொடர்பான விசாரணை, உயர் நீதிமன்றங்களில் இருந்து, உச்ச நீதிமன்றத்துக்கு பின்னர் மாற்றப்படும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வேதாந்தா வழக்கு இன்று விசாரணை
தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக, 2018ல் போராட்டங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட வன்முறையின்போது, போலீசார் சுட்டதில், 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரி, அதை இயக்கி வரும், 'வேதாந்தா' குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.''ஆக்சிஜன் ஆலையில், நாளொன்றுக்கு, 1,000 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம். ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும்,'' என, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வலியுறுத்தினார்.


இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கூறிய தமிழக அரசு, ஆலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 'ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.'ஆக்சிஜனுக்கான தேவை, தேசிய அவசர நிலையாக உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, ஆக்சிஜன் ஆலையை மட்டும் இயக்க அனுமதிப்பதில், என்ன பிரச்னை உள்ளது? இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்' என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஏப்-202116:22:41 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு இந்த நீதிபதிகள் எல்லாம் எதோ ஆறு மாதமாக வெளிநாட்டில் தங்கிவிட்டு இப்போதுதான் இந்தியாவிற்கு திரும்பி வந்தது போல கேள்வி எழுப்புகிறார்கள்
Rate this:
Cancel
23-ஏப்-202122:32:22 IST Report Abuse
ஆப்பு 2050 கே அந்தர் கோரோனாக்கோ கதம் கர்லேங்கேன்னு தொலைநோக்கு வடை சுட்டு சுப்ரீம் கோர்ட்டாருக்கு குடுத்தா போறும்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202122:04:17 IST Report Abuse
rajan எங்கள் பகுதியில் சென்ற மாதம் சுகாதாரத்துறை அலுவலர்கள் வீட்டுக்கு வீடு வந்து கெஞ்சினார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாருங்கள் வாகனம் எடுத்து வந்துள்ளோம் அழைத்துப்போய் திரும்ப கொண்டு விடுகிறோம் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் வந்து கெஞ்சினார்கள். ஆனால் பயந்துகொண்டுஅலட்சியமாக மக்கள் இருந்துவிட்டார்கள். இப்படி தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஊசி போட்டுக் கொள்ள செல்லாததால் லட்சக்கணக்கில் ஊசி மருந்து காலாவதியாகி வீணாகிவிட்டது. ஆனால் தற்போது அரசாங்கத்திடம் மக்கள் ஊசி போட்டுக் கொள்ள கெஞ்சுகிறார்கள் காத்திருக்கிறார்கள். இதில் அரசை குறை சொல்வதில் என்ன நியாயம் உள்ளது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X