பொது செய்தி

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி : 28ம் தேதி முதல் பதிவு

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021
Share
Advertisement
புதுடில்லி :'நாடு முழுவதும், 18 - 45 வயதுக்குட்பட்டோர், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, 28ம் தேதி முதல் பதிவு செய்து கொள்லலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கும்
18 வயது,தடுப்பூசி ,28ம் தேதி, பதிவு

புதுடில்லி :'நாடு முழுவதும், 18 - 45 வயதுக்குட்பட்டோர், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, 28ம் தேதி முதல் பதிவு செய்து கொள்லலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல் கட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டத்தில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது மூன்றாவது கட்டத்தில், 18 - 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணி, மே, 1 முதல், துவங்க உள்ளது. 'முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும்' என, கூறப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய அரசு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news




* நாட்டில், 18 - 45 வயதுக்கு உட்பட்டோர், முன்பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி பெற முடியும்.

* இதற்காக, 'கோவின்' என்ற இணைய தளத்தில் அல்லது 'ஆரோக்கிய சேது' செயலியில் முன்பதிவு செய்யலாம்.

* வரும், 28ம் தேதியில் இருந்து முன்பதிவு துவங்குகிறது.

* முன்பதிவு செய்யாதவர்களுக்கு தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி செலுத்தப்படாது.

* முதல் இரண்டு கட்ட தடுப்பூசி இயக்கம் தொடர்ந்து நடக்கும். 45 வயதுக்கு மேற்பட்டோர், முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

* முதல் இரண்டு கட்டங்களில், ஒருவர், தனக்காக மட்டுமல்லாமல், மேலும், நான்கு பேருக்கு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆனால், மூன்றாவது கட்டத்தில், தனக்காக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X