பொது செய்தி

இந்தியா

படிக்கல் அதிரடி சதம்: பெங்களூரு கலக்கல் வெற்றி

Updated : ஏப் 22, 2021 | Added : ஏப் 22, 2021
Share
Advertisement
மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தேவ்தத் படிக்கல் 'சூறாவளி' சதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி பெற்றது. கோஹ்லி அரைசதம் கடந்தார்.மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு
IPL 2021, RCB vs RR, Padikkal, Kohli

மும்பை: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தேவ்தத் படிக்கல் 'சூறாவளி' சதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் 'சூப்பர்' வெற்றி பெற்றது. கோஹ்லி அரைசதம் கடந்தார்.

மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் (8), மனன் வோரா (7) ஏமாற்றினர். டேவிட் மில்லர் 'டக்-அவுட்' ஆனார். கேப்டன் சஞ்ச சாம்சன் (21) நிலைக்கவில்லை. பின் இணைந்து பொறுப்பாக ஆடிய ரியான் பராக் (25), ஷிவம் துபே (46) ஜோடி நம்பிக்கை தந்தது. அபாரமாக ஆடிய ராகுல் டிவாட்டியா, 23 பந்தில் 40 ரன் (2 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து கைகொடுத்தார். கிறிஸ் மோரிஸ் (10) சோபிக்கவில்லை. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது.


latest tamil news


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ராகுல் டிவாட்டியா பந்தில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த படிக்கல், முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.

பெங்களூரு அணி 16.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72 ரன், 3 சிக்சர், 6 பவுண்டரி), படிக்கல் (101 ரன், 6 சிக்சர், 11 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X