பொது செய்தி

இந்தியா

பருவநிலை மாற்ற பாதிப்பை தடுப்போம்: பிரதமர் மோடி பேச்சு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி :''பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, அமெரிக்கா சார்பில், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, நேற்று நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்தியா உட்பட, 40 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.இந்த
 பருவநிலை மாற்றம், பாதிப்பு,  தடுப்போம் , மோடி பேச்சு

புதுடில்லி :''பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, இந்தியா உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, அமெரிக்கா சார்பில், 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக, நேற்று நடந்தது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்தியா உட்பட, 40 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, வேகமாக, உறுதியாக, மிகப் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்தியா ஏற்கனவே, உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


latest tamil news
நானும், அமெரிக்க அதிபர் பைடனும் இணைந்து, இந்தியா - அமெரிக்கா பருவநிலை மாற்றம் மற்றும் துாய்மை எரிசக்தி திட்டத்தை துவக்கி வைக்க உள்ளோம்.துாய்மையான எரிசக்தி, காடு வளர்ப்பு, உயிரி எரிபொருள் ஆகியவற்றை மேம்படுத்த, பல நடவடிக்கைகளை, இந்தியா எடுத்துள்ளது. பருவநிலை மாற்றத்தின் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற, ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், இந்தியா, தன் கடமையை சரியாக செய்து வருகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
23-ஏப்-202109:47:20 IST Report Abuse
Sandru ஓட்ட பானையில் நண்டு ஓடுவது போல விடாமல் பேசி கொண்டே இருக்கிறார் இந்த வாய் சொல் வீரர்.
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
23-ஏப்-202108:38:58 IST Report Abuse
R.RAMACHANDRAN இந்தியாவில் கடமைகளை செய்வதுபோல பாசாங்கு செய்கிறார்கள்.
Rate this:
Cancel
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
23-ஏப்-202108:36:39 IST Report Abuse
Velusamy Ramesh Industries should be there but it does not produce pollution. we are cause for climate change... greedy about money. not taking care of environment..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X