பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல் அதிகரிப்பு: கேரளாவில் கடுமையானது கட்டுப்பாடுகள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மூணாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.20 முதல் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.*மாநிலத்தில் நாளை (ஏப்.24) அரசு அலுவலங்கள், பொது துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு
 கொரோனா , கேரளா, கடுமை, கட்டுப்பாடுகள்

மூணாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்.20 முதல் இரவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது.

*மாநிலத்தில் நாளை (ஏப்.24) அரசு அலுவலங்கள், பொது துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில்

பணி நாட்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்ல அனுமதியுண்டு.


latest tamil news



* ஏப்.24,25 ல் அத்தியாவசிய கடைகள் மற்றும் காய்கறி, பழம், பால்,மீன், இறைச்சி ஆகிய கடைகள் மட்டும் திறக்கலாம். ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் உணவுகள் பார்சல் மட்டும் வழங்கலாம்.

*பள்ளிகளில் ‛ஆன் லைன்' மூலம் வகுப்புகள் நடக்கும். டியூசன் மையங்கள் திறக்க அனுமதியில்லை. கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படலாம்.

குழப்பம்
மாநிலத்தில் கடைகள் இரவு 9:00 மணி வரை செயல்படலாம் என அரசு அறிவித்ததை வர்த்தகர்கள் கடை பிடித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் பினராயிவிஜயன் கடைகள் இரவு 7:30 மணிக்கு அடைக்குமாறு நேற்று முன்தினம் கூறியதால் குழப்பம் அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
23-ஏப்-202111:10:05 IST Report Abuse
kosu moolai கேரளாவை பார். சேச்சி சேச்சிதான் என்ற கோஷம் வானை பிளக்கும். பேராசிரியர், டேனியல் ரஸா அனைவரும் விஜயனுக்கு புகழ் படுவார்கள். தமிழ் காட்சி ஊடகங்களில் கட்டாயம் விவாதம் நடக்கும்..
Rate this:
Cancel
Sathya Dhara - chennai,இந்தியா
23-ஏப்-202109:02:40 IST Report Abuse
Sathya Dhara கேரளாவில் இருக்கும் அனைத்து பாரத பிரஜைகளும் நலம் பெற மனமார இறைவனை வேண்டுவோம். கொள்ளை அடித்து கொள்ளை அடித்து வெளிநாட்டுக்கு ஹிந்துக்களை காட்டிக்கொடுக்கும் துரோக அரசு ஒழிந்தால் பாவங்கள் ஒழியும். வியாதிகள் ஒழியும்.
Rate this:
Cancel
Ganesan - Masurai,இந்தியா
23-ஏப்-202107:42:19 IST Report Abuse
Ganesan படித்தவன் அதிகருக்கும் கேரளாவில் கொரோனோ அதிகரிப்பதன் காரணம் அரசின் நிர்வாகத் திறமையின்மையா இல்லை மக்களின் அலட்சியப் போக்கா. எதுவாயினும் பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X