பொது செய்தி

இந்தியா

சுமித்ரா மகாஜன் காலமானதாக சசி தரூர் தவறான டுவிட்; நலமுடன் இருப்பதாக பா.ஜ., பதில்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானதாக, மூத்த காங்., தலைவர் சசி தரூர் டுவிட் செய்தார். சுமித்ரா நலமுடன் இருப்பதாக பா.ஜ.,வின் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்ததையடுத்து, சசிதரூர் தனது டுவிட் பதிவை நீக்கினார்.பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் எனவும் அவரது ஆத்மா
Sumitra Mahajan, Shashi Tharoor, Kailash Vijayvargiya, BJP

புதுடில்லி: முன்னாள் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானதாக, மூத்த காங்., தலைவர் சசி தரூர் டுவிட் செய்தார். சுமித்ரா நலமுடன் இருப்பதாக பா.ஜ.,வின் கைலாஷ் விஜய் வர்க்கியா தெரிவித்ததையடுத்து, சசிதரூர் தனது டுவிட் பதிவை நீக்கினார்.

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் லோக்சபா சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் எனவும் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனவும் காங்., மூத்த தலைவர் சசிதரூர் டுவிட் செய்திருந்தார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.


latest tamil news


இந்நிலையில், பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, சுமித்ரா நலமுடன் இருப்பாகவும், கடவுள் அவரை நீண்ட காலம் ஆசிர்வதிப்பார் எனவும் பதிலளித்தார். இதனையடுத்து, சுமித்ரா மகாஜன் இறந்ததாக தான் பதிவிட்ட டுவிட்டை, நீக்கிய சசிதரூர், ‛நன்றி கைலாஷ் ஜி. எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் தீயவர்களை எது தூண்டுகிறது என நினைக்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சுமித்ரா ஜி உடல் நலத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும்' என பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-202116:04:27 IST Report Abuse
J.V. Iyer ஆரே தேவுடா
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
23-ஏப்-202115:50:06 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு " மனைவி மர்ம மரணம் " வழக்கை பிஜேபி தூசு தட்டி எடுத்திருச்சோ ?
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஏப்-202114:19:58 IST Report Abuse
முக்கண் மைந்தன் கோப்பால், கோப்பால் .........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X