ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கதறியவரிடம் கன்னத்தில் அறைவேன் என்ற அமைச்சர்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு, ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கண்ணீர் விட்டு கதறிய நபரிடம், ''இரண்டு அறை விடுவேன்,'' என கொந்தளித்த மத்திய அமைச்சரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தாமோ லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., பிரஹலாத் படேல். இவர்,
 ஆக்சிஜன், சிலிண்டர் ,கதறல், அறை,அமைச்சர்

புதுடில்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தாய்க்கு, ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கண்ணீர் விட்டு கதறிய நபரிடம், ''இரண்டு அறை விடுவேன்,'' என கொந்தளித்த மத்திய அமைச்சரின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள தாமோ லோக்சபா தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., பிரஹலாத் படேல். இவர், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.


latest tamil news




கொரோனா தொற்று பரவல் மிகக் கடுமையாக உள்ள, 10 மாநிலங்களில், மத்திய பிரதேசம் இடம் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தாமோ மாவட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள, ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கும் அறைக்குள், சமீபத்தில் புகுந்த நோயாளிகளின் உறவினர்கள், சிலிண்டர்களை திருடிச் சென்றனர்.
இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் பிரஹலாத் படேல், தமோ மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தார். அப்போது, அமைச்சரை அணுகிய சிலர், தங்கள் உறவினர்களுக்கு ஆக்சிஜன் சிலண்டர் அளித்து உதவும்படி கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், தன் தாய், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ஆக்சிஜன் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும் தெரிவித்தார்.தயவு செய்து தன் தாயின் உயிரை காப்பாற்றும்படி, அமைச்சர் முன், கண்ணீர்விட்டு கதறினர்.
இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் பிரஹலாத் படேல், ''இப்படியே பேசிக் கொண்டிருந்தால், கன்னத்தில் இரண்டு அறை விடுவேன்,'' என கூறினார. அமைச்சரின் இந்த பேச்சு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
23-ஏப்-202120:43:24 IST Report Abuse
THINAKAREN KARAMANI இரக்கமற்ற பேச்சு. பொறுப்புள்ள பதவியில் வகிப்பவர் பேசும் பேச்சா இது. தன் சொந்தம் உயிரிழக்கப் போகிறார் என்ற நிலைவரும்போது ஏற்படும் பதட்டம் அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஏப்-202120:05:10 IST Report Abuse
Krishnamurthy Venkatesan வாய்க்கொழுப்பு மந்திரிகளை பாஜக தலைமை அடக்கி வைக்க வேண்டும். மந்திரி என்பதற்கு தகுதி இல்லாதவர் இவர். oxygen சிலிண்டர் தரவேண்டாம், ஆறுதலாக ரெண்டு வார்த்தை சொன்னாலே போதுமே?
Rate this:
Cancel
23-ஏப்-202119:35:36 IST Report Abuse
warm regards நாங்க எதுக்கு புலபனும் நீங்கதான் புலபுறிங்க போலீஸை கண்டால் திருடனுக்கு பிடிக்காது அதுபோல பிஜேபியை கண்டால் சுடலின், குருமவளவன், பப்பு, மமதை, பா.சி போன்றுக்கு பிடிக்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X