பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை விரட்ட கடவுள் கொடுத்த வரம்! தடுப்பூசி செலுத்த தயக்கம் வேண்டாம்: டாக்டர்கள் வேண்டுகோள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோவை :'தடுப்பூசி என்பது கடவுள் கொடுத்த வரம். தடுப்பூசி மருந்து செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்' என, டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே நோய் தொற்று மற்றும் தீவிர தன்மையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனால் வீண் வதந்திகளை நம்பாமல், தயக்கம் தவிர்த்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்
Corona Virus, doctors, Corona Vaccine, கொரோனா, தடுப்பூசி, டாக்டர்கள், வேண்டுகோள்

கோவை :'தடுப்பூசி என்பது கடவுள் கொடுத்த வரம். தடுப்பூசி மருந்து செலுத்த அனைவரும் முன்வர வேண்டும்' என, டாக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றே நோய் தொற்று மற்றும் தீவிர தன்மையில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனால் வீண் வதந்திகளை நம்பாமல், தயக்கம் தவிர்த்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கோவை டாக்டர்கள் கூறியதாவது:


அனைவருக்கும் பாதுகாப்பு!latest tamil news
மனோன்மணி, மகப்பேறுத் துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை:
எங்கள் குடும்பத்தில், 45 முதல், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இது போன்ற இக்கட்டான சூழலில், கர்ப்பிணிகள் அதிகம் வெளியில் செல்வதைத் தவிர்த்து, வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேசமயம், கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில், மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும். அவ்வாறு, தடுப்பூசி செலுத்திக் கொண்டால், கர்ப்பிணி பெண்களும், குழந்தையையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்.


கண்கள் வாயிலாக பரவலாம்!


பாக்கியலட்சுமி, கண் மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை:
இன்னும் பலருக்கு கொரோனா தொற்று கண்கள் மூலமாகவும் பரவும் என்பது தெரியவில்லை. எனவே, மருத்துவமனை போன்ற முக்கிய இடங்களுக்கு செல்லும்போது, முக கவசத்தோடு, கண்களை பாதுகாக்கும் வகையில், கண்ணாடி அல்லது பேஷ் ஷீல்டு போன்றவற்றை அணிந்து செல்லவும். சமீபத்தில், டில்லியில் நிறைய டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருந்ததால், யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, தடுப்பூசியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.


கடவுள் கொடுத்த வரம்!சுகந்தி, குழந்தைகள் நல மருத்துவர், கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை:
கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காலக்கட்டத்தில், முகக் கவசம், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி இதற்கு அடுத்தபடியாக, தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. இந்த தடுப்பூசி, உலகம் முழுவதும், பல விஞ்ஞானிகள், டாக்டர்களால் பல்வேறு முயற்சிகள் செய்து பல கட்ட சோதனைக்கு பின்னரே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே, தடுப்பூசி என்பது கடவுள் கொடுத்த வரம். அதை பயன்படுத்திக் கொள்ள மக்கள் முன் வர வேண்டும்.


பெரிய பாதிப்புகள் இல்லை!


மோகன்பிரசாத், தலைவர், வி.ஜி.எம்.,மருத்துவமனை:
கொரோனா வைரசை தடுக்க வேண்டும் என்றால், தடுப்பூசி போட்டுக் கொள்வது ஒன்று தான் ஒரே வழி. தடுப்பூசி போட்ட இடத்தில், வெள்ளை அணுக்கள் நிறைய இருக்கும், மேலும், ரத்த ஓட்டம் அதிகம் இருக்கும் இதன் காரணமாகவே வீக்கம், காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறிய பிரச்னைகள் வருகின்றன. இது தவிர, பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் வராது. இந்தியாவில், 13 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் 1.7 கோடி பேர் மட்டுமே இரண்டு தவணையிலும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே, இந்த பேரிடர் காலத்தில் கொரோனாவில் இருந்து நாட்டை காப்பாற்ற ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


70 சதவீதம் பேர் தடுப்பூசி!


ஆதித்தன் குகன், பொதுமருத்துவர், ஏ.ஜி.எஸ்., ஹெல்த்கேர் மருத்துவமனை:
கொரோனா தடுப்பூசி போடுவதால், பக்கவிளைவுகள் வரும் என்று பலரும் நினைக்கின்றனர். கோவிஷீல்டு, கோவாக்சின், இரண்டு தடுப்பூசிகளுமே, 80 முதல் 87 சதவீதம் வரை பாதுகாப்பு அளிக்கக் கூடியது. சரியான நேரத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. எதிர்வரும் காலங்களில், கொரோனா மூன்றாவது அலையை தடுக்க வேண்டும் என்றால், மொத்த மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும்.

தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது. ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், நோய் பரவும் தன்மை குறைகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும், தொற்று பாதித்தாலும், உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். புற்றுநோய், இதய நோய் பாதிப்புள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும், தடுப்பூசி போட்டுக் கொண்டு வழக்கமான மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர். அது போன்றவர்களுக்கு இதுவரை எந்தவொரு பக்க விளைவு பாதிப்பும் ஏற்படவில்லை. சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்பாமல், அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைக்கு தடுப்பூசி தான் கொரோனாவிலிருந்து நம்மை காக்கும் மிகப்பெரிய ஆயுதம்.
டாக்டர் ஜி.எஸ்.ராஜேஷ்,
வட்டார மருத்துவ அலுவலர்
மீஞ்சூர்.

என்னை போல் உள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியால் பக்கவிளைவுகள் இல்லை; பாதுகாப்பானது. இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளதால், நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.
கே.எம்.சங்கர்,44,
தலைமை காவலர்,
திருத்தணி போலீஸ் நிலையம்.

சுய பாதுகாப்பு மற்றும் சமூக நலனை கருத்தில் கொண்டு, இரண்டு கட்டமாக, ‛கொரோனா' தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். இதர தடுப்பூசிகளை போன்றே இதுவும். தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கிறேன்.
-பி.கே.மணி, 47,
அரசு பள்ளி உதவி தலைமையாசிரியர்,பொம்மராஜிபேட்டை.

உயிர் காக்கும் மருத்துவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதே, என் போன்றவர்களுக்கு பாதுகாப்பு என்ற ரீதியில், இரண்டு கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். அரசு பள்ளியில் தோட்ட பணிகளை, எந்த வித சோர்வும் இன்றி, முழு ஆரோக்கியத்துடன் மேற்கொண்டு வருகிறேன்.
-வி.இ.பாரதி, 49,
அரசு பள்ளி தோட்டக்காரர்,
சொரக்காய்பேட்டை.


தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்


சென்னை போக்கு வரத்து போலீசார் சார்பில், அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே, கொரோனா குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியை, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று துவக்கி வைத்தார்.பின், நிகழ்ச்சிக்கு வந்திருந்த, முன்கள பணியாளர்கள், பொதுமக்களுக்கு, கபசுர குடிநீர் மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

பின், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, முக கவசம் அணிதல், சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பொது இடங்களில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் கணேஷ், போலீஸ் இணை கமிஷனர்கள் எழிலரசன், செந்தில்குமாரி உள்ளிட்ோர் உடனிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஏப்-202101:49:50 IST Report Abuse
ஆப்பு கொரோனாவும் இறைவன் படைப்பல்லவோ... பாருங்க மைக்ரிஸ்கோப்புல பாத்தாலும் எவ்ளோ அழகா இருக்கு.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஏப்-202116:17:38 IST Report Abuse
J.V. Iyer கரோனாவில் மக்கள் இறந்தால் மக்கள்தொகை குறையும். மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டால், நல்லது, இதை தடுக்கலாம்.. எல்லாம் நன்மைக்கே. சுய அறிவுடன் செயல் படவேண்டும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறைசொன்னால் ஒன்றுக்கும் உதவாது.
Rate this:
Cancel
Gayathri - Nagercoil,இந்தியா
23-ஏப்-202110:11:28 IST Report Abuse
Gayathri vaccine shortage problem in kanyakumari District? I ask in private hospitals in Nagercoil for the second dose of covishield for my father, but every day they says not available..ask in some phc and mini clinic in our place.. they are also says not available... KADHAVUL KODUTHA VARATHAI THARA MARUPATHU YAAR??
Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-ஏப்-202116:00:13 IST Report Abuse
Loganathan KuttuvaNow the vaccine is available in all health centres....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X