பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அந்த ஆர்வம் எங்கே போச்சு?

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபைக்கு, 1952 முதல், தற்போது நடந்து முடிந்த, 16வது தேர்தல் வரை, ஓட்டுப்பதிவு அதிகளவில் இருந்தது, 2011 தேர்தலில் தான். அப்போது, 78.01 சதவீதம் ஓட்டுப் பதிவானது. அதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து, 10 ஆண்டுகளாக,
TN elections, Vote, Voters, election


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபைக்கு, 1952 முதல், தற்போது நடந்து முடிந்த, 16வது தேர்தல் வரை, ஓட்டுப்பதிவு அதிகளவில் இருந்தது, 2011 தேர்தலில் தான். அப்போது, 78.01 சதவீதம் ஓட்டுப் பதிவானது. அதற்கு முக்கிய காரணம், தொடர்ந்து, 10 ஆண்டுகளாக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் நடந்த, மெகா ஊழல்கள். மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்து இருந்த, தி.மு.க., மீதும், தமிழக மக்கள் கோபம் கொண்டிருந்தனர்.

அப்படி ஒரு கோபம், தற்போது தமிழக வாக்காளர்களிடம் இல்லை என்பதாலும், யாரையும் சரியாக பிடிக்காத காரணத்தாலும், ஓட்டுப்போட செல்லவில்லையோ என, நினைக்கத் தோன்றுகிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த தேர்தலை விட, பல லட்சம் அதிகரித்துள்ளது என்றாலும், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், படிப்பறிவு குறைவாக உள்ள மாவட்டங்களில் எல்லாம் ஓட்டுச் சதவீதம் அதிகமாக உள்ள போது, மெத்தப்படித்த, சென்னை வாக்காளர்கள் தான், வழக்கம்போல ஓட்டுசாவடி பக்கம் செல்லவில்லை என்பது, வருத்தம் அளிக்கிறது.


latest tamil news


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றில், படித்தோர் அலட்சியம் காட்டுகின்றனர். அதுவே, அரசு தரும் விலையில்லா பொருட்களை பெறவும், நிவாரணங்கள் பெறவும், தங்களது ரேஷன் அட்டைகளை மட்டும் பாதுகாப்பாக, முறையாக வைத்துக் கொள்கின்றனர். சமீபத்தில், தமிழக அரசு வழங்கிய, 2,500 ரூபாய் பொங்கல் பரிசை, 98.86 சதவீதம் பேர், ரேஷன் கடையில் வரிசையில் நின்று, தவறாமல் வாங்கியுள்ளனர்.

அதில் காட்டிய ஆர்வத்தை, அடுத்த மூன்று மாதத்தில் நடந்த தேர்தலில் ஏன் காட்டவில்லை? ஓட்டு போடாதவருக்கு ரேஷன் பொருட்கள், மானியம், நிவாரணம் நிறுத்தி வைக்கப்படும் எனக் கூறினால் போதும்... ஓட்டுச்சாவடியில் வரிசைகட்டி நின்று, தங்களது ஜனநாயக கடமையை, 100 சதவீதம் அனைவரும் நிறைவேற்றி விடுவர். அடுத்து வரவுள்ள தேர்தலில், இம்முயற்சி நிச்சயம் நல்ல பலன் அளிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) வாக்களிக்காதவர்களை அகதியாக அறிவிக்க வேண்டும் உரிய காரணத்தோடு உரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தின் அனுமதிப்பெற்றால் மட்டுமே வாக்களிக்காதவர்கள் அகதி எனும் குறியீடு நீக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-ஏப்-202119:07:02 IST Report Abuse
g.s,rajan எல்லாரும் ஒட்டுப் போட ஆரம்பிச்சுட்டா மக்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது என்று அர்த்தம் ,ஆனால் அரசியல்வாதிகள் அதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள் .மக்கள் அனைவரும் ஒட்டுப் போட்டு விட்டால் அவர்கள் ஜெயிப்பது மிகக் கடினம் பாமர மக்களை ஏமாற்றுவது போல் படித்த மக்களை ஏமாற்றவே முடியாது .படித்த மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஒட்டுப் போட்டால் அது அரசியல்வாதிகளுக்குப் பாதகத்தைத்தான் உண்டாக்கும்.ஒன்றும் அறியாத மக்களை ஏமாற்றுவது எளிது அவர்களின் ஓட்டைப் பெறுவது மிக எளிது . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
23-ஏப்-202118:11:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சுடலை தொகுதியில் வோட்டு குறைந்துள்ளது தீயமுக தோற்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதை காட்டவில்லையா? இதுவே போதும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X