அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வி பயத்தில் உளறும் திமுக: எச்.ராஜா காட்டம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (117)
Share
Advertisement
காரைக்குடி: ''சட்டசபை தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் தி.மு.க. - கூட்டணி கட்சியினர் உளறுகின்றனர்'' என காரைக்குடியில் பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளன. புதுச்சேரி அசாம், கேரளாவில் தேர்தல் முடிந்துவிட்டது. எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தி.மு.க. காங்.
H Raja, BJP, DMK

காரைக்குடி: ''சட்டசபை தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் தோல்வி பயத்தில் தி.மு.க. - கூட்டணி கட்சியினர் உளறுகின்றனர்'' என காரைக்குடியில் பா.ஜ. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளன. புதுச்சேரி அசாம், கேரளாவில் தேர்தல் முடிந்துவிட்டது. எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தி.மு.க. காங். கட்சியினர் மற்றும் கமல் ஆகியோர் ஆட்டம் போடுகின்றனர். ஓட்டு இயந்திரத்தை 'ஹேக்' செய்ய முடியாது. தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசியபோது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


latest tamil news



ஓட்டு பெட்டிகளை 'ஹேக்' செய்ய முடியும் என்றால் பார்லி. தேர்தலில் ஏன் 38 தொகுதியில் தி.மு.க. - காங். கூட்டணி வென்றது. சட்டசபை தேர்தல் தோல்வி பயத்தில் தி.மு.க. - காங். கட்சியினர் கமல் உளறுகின்றனர். தமிழகத்திற்கு 58 ஆயிரம் கொரோனா தடுப்பூசி வந்ததில் 46 ஆயிரம் போடப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-202116:03:52 IST Report Abuse
Malick Raja சில கருத்தாளர்கள் கயமை குணத்துடன் கருத்துக்கள் சொல்லி இருப்பது அறிவிலித்தனத்தின் எடுத்துக்காட்டாக இருக்கும்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
26-ஏப்-202112:37:53 IST Report Abuse
Dr. Suriyaநீங்க தான் அறிவோட சொல்லுங்க கேட்கிறோம்.......
Rate this:
Cancel
warm chelli -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202118:42:26 IST Report Abuse
warm chelli கருப்பு பணம் ஒழிந்ததால் தான் இன்று பாக் திவால் இது உங்க சிதபரதிடம் கேளுங்கள் ஏன் நோட் அடிகும் மிசினை பாகிஸ்தானுக்கு ஏலம் விட்டீர்கள் என்று
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
23-ஏப்-202118:26:38 IST Report Abuse
Mirthika Sathiamoorthi கவலைய விடுங்க தலை நாம என்னவேனும்னாலும் பேசிக்கலாம்..பின்னாடி பிரச்சனைன்னா நான் இல்ல அட்மின்னு, அட்மின் மேல பழி யப்போட்டுடலாம்...எப்புடி நம் ராஜ தந்திரம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X