பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 1.93 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,93,279 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்தது. 24.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,86,920 பேர்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,93,279 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியது.

ஒரே நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்தது. 24.28 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,86,920 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 83.92 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.49 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 14.93 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில் 17,40,550 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 27 கோடியே 44 லட்சத்து 45 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஏப்ரல் 23-ம் தேதி) காலை 10:00 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் 14 கோடியே 53 லட்சத்து 44 ஆயிரத்து 801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 லட்சத்து 85 ஆயிரத்து 284 பேர் பலியாகினர். 12 கோடியே 33 லட்சத்து 44 ஆயிரத்து 649 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-ஏப்-202118:43:33 IST Report Abuse
Poongavoor Raghupathy ஒரு நாள் மோடியின் இடத்தில ஸ்டாலின் இருந்து செயல் பட்டால் கடின நாட்கள் தெரியவரும். மோடியை குறை சொல்லாமல் எல்லோரும் சேர்ந்து கொரோனவை எப்படி விரட்டவேண்டும் என்பதை செய்வதுதான் தற்சமயம் தேவை. மக்கள் நலனை பார்த்து அரசியலை தள்ளி வைப்பவர்கள் தான் உண்மையான அரசியல் வாதிகள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஏப்-202115:55:29 IST Report Abuse
sankaseshan இதுபோன்ற பாசிட்டிவான செய்திகளை தமிழக போலி வூடகங்கள் ( not dinamalar ) சொல்ல மாட்டார்கள் பலி எண்ணிக்கையை சொல்லி பீதி கிளப்புவானுங்க
Rate this:
enkeyem - sathy,இந்தியா
23-ஏப்-202116:41:40 IST Report Abuse
enkeyemஅவர்களது ஒரே நோக்கம் மோடி மீது பழி போடுவது...
Rate this:
Cancel
murphys law -  ( Posted via: Dinamalar Android App )
23-ஏப்-202113:18:36 IST Report Abuse
murphys law 🥳🥳🥳🥳🥳
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X