பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா இருக்கா? ஆறு நிமிட நடைபயிற்சியில் கண்டறியலாம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
தேனி:''அறிகுறிகள் இன்றி, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை, ஆறு நிமிட நடைபயிற்சியில் எளிதாக கண்டறிந்து விடலாம்,'' என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கொரோனா ஏற்பட்டிருந்தால், ஆரம்ப அறிகுறிகளாக உடல் அசதி, வலி, கண் சிவந்து போதல், உடல் அரிப்பு, தொடர் வயிற்றுப்போக்கு, நடக்கும் போது மூச்சு வாங்குதல், தொண்டை வலி,
கொரோனா, நடைபயிற்சி, கொரோனா வைரஸ், கோவிட்19

தேனி:''அறிகுறிகள் இன்றி, ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை, ஆறு நிமிட நடைபயிற்சியில் எளிதாக கண்டறிந்து விடலாம்,'' என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:கொரோனா ஏற்பட்டிருந்தால், ஆரம்ப அறிகுறிகளாக உடல் அசதி, வலி, கண் சிவந்து போதல், உடல் அரிப்பு, தொடர் வயிற்றுப்போக்கு, நடக்கும் போது மூச்சு வாங்குதல், தொண்டை வலி, மூக்கடைப்பு உள்ளிட்டவை இருக்கும்.பாதிப்பு உள்ளவர்கள், உடனடியாக டாக்டர்களின் ஆலோசனையில் சிகிச்சை எடுக்க வேண்டும். சிலருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிந்த பின், நுரையீரலில் தொற்று, 'சி.டி., ஸ்கேன்' மூலம் கண்டறியப்படும்.பொதுமக்கள், கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருக்க வேண்டும்.


latest tamil newsவீடுகளில், ஒரு அறையில் தொடர்ந்து, ஆறு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டால், மூச்சுத் திணறல், நடைபயிற்சிக்கு இடையூறு ஏற்படும். அவ்வாறு இருந்தால், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக டாக்டரை அணுகி, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த நடைபயிற்சியை, தினமும் 2 அல்லது 3 முறை செய்து, ஆக்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனை மையத்தில் உள்ளவர்கள், இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
26-ஏப்-202110:14:57 IST Report Abuse
ganapati sb வீட்டில் ஒரு அகலமான மண் அல்லது செப்பு பாத்திரத்தில் இரண்டு பசு சாண வறட்டி வைத்து அதில் பஞ்சுத்திரி வைத்து ஏற்றி அதில் சிறிது முனை உடைய பச்சரிசி அல்லது நெல்லை சிறிது பசுநெய் கொண்டு பிரட்டி சூரிய உதய அஸ்தமன காலத்தில் ஆவாஹனம் செய்து காலையில் கதிரவனையும் மாலையில் அக்னியையும் வணங்கி வழிபட அந்த வீட்டில் அதிக அளவு ஓசோன் எனப்படும் ஆக்சிஜென் zone உருவாகி உடலுக்கும் மனதிற்கும் நன்மை பயக்கும் இதை முன்னாளில் அக்னி ஹோத்திரம் என்றும் சொல்வர். இதை திருமணம் ஆன அனைவரும் செய்யலாம். தீப்பெட்டி கண்டுபிக்காத மின்விளக்கு கண்டுபிடிக்காத சுமார் 200 வருடம் முன்பு வரை அக்னியை சமையல் யாகம் வெளிச்சத்திற்கு தொடர்ந்து பயன்படுத்த நம கலாச்சாரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த அக்னி குஞ்சு தொடர்ந்து கனலாக அக்னி சட்டியில் இருந்து வந்தது. அதை திருமணம் செய்பவருக்கு திருமணம் செய்ய செய்யும் யாகத்திலிருந்து அக்னியை சட்டியில் கொடுத்து அதை தன வீட்டில் தொடர சொல்லி கொடுப்பார்கள். அவர் தொடர்ந்த அந்த அக்னியே அவரது இறுதி சடங்கில் கூட பயன்படுத்தப்படும்.
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202109:34:08 IST Report Abuse
oce குரோனாவுக்கு நேர் எதிரி மூச்சடக்கப் பயிற்சி. இதை பிராணயாமம் என்று சொல்கிறார்கள். யோகிகளும் ஞானிகளும் இந்த பயிற்சிகளால் நோய் நொடி இன்றி நீண்ட நாள் வாழ்ந்துள்ளார்கள்.
Rate this:
Cancel
vns - Delhi,யூ.எஸ்.ஏ
23-ஏப்-202122:19:34 IST Report Abuse
vns TB, கான்செர்,மாரடைப்பு இவைகளால் இறப்பவர்கள் எண்ணிக்கை கொரோனாவால் தினமும் இறப்பவர்களை விட அதிகம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X