சென்னை: லேசான அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனை செல்ல வேண்டாம் என்றும், அவர்களும் மருத்துவமனை வருவதால், மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டை விட இந்தாண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை. அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். லேசான அறிகுறி உள்ளவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதுமானது. குறைவான அறிகுறி உள்ளவர்களும் மருத்துவமனை வருவதால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

சாதாரண அறிகுறி கொண்டவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, காய்ச்சல் முகாம்களுக்கு வந்து சோதனை மேற்கொள்ளுங்கள். தீவிர பாதிப்பு உள்ளவர்களை மாநகராட்சி வாகனத்திலேயே மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அரசு பரிந்துரைத்த சத்தான உணவுகள் வழங்கப்படும், மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE