20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் முதல்வர் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா
கொரோனா, தடுப்பூசி, பிரதமர், நரேந்திர மோடி, மோடி, பிரதமர் மோடி, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர், முதல்வர் பழனிசாமி,   பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், கடிதம்

சென்னை: தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் கூறி உள்ளதாவது: தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.


latest tamil news


அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, தமிழகத்திற்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்.

ஒரு சில மாநிலங்கள் ரெம்டெசிவிர் மருந்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தடுக்கும் நடவடிக்கையை தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-202100:43:00 IST Report Abuse
Pugazh V இதை வலியுறுத்தித் த்தான் சில நாட்கள் முன்பே ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைப் படித்து விட்டு பாஜக அதிமுக வாசகர்கள், ஆ...கடிதம் எழுதிட்டர்.. கடமை ஓவர்.. பிரதமருக்கு தெரியும் நீ சொல்லவேணாம் என்றெல்லாம் கருத்து என்ற பேரில் கதறினார்கள். ஆனால் இப்போது அவர்களைக் காணவில்லை. ஹா ஹா ஹா..
Rate this:
Cancel
think out of box - london,யுனைடெட் கிங்டம்
23-ஏப்-202119:52:33 IST Report Abuse
think out of box Sir, Please post the letter to Bengal address, otherwise it will get lost.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-ஏப்-202119:17:42 IST Report Abuse
M  Ramachandran ஆட்சியில்லா கட்சி அரசின் எல்ல நடவடிக்கையும் அதற்க்கு கிடைக்கிறது. இது எப்படி? அரசில் கருப்பு ஆட்டு மந்தையை உள்ளே வேலை செய்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அப்படி இருக்கையில் வரும் கொராணா எதிர்ப்பு மருந்துகள் கோடாவ்னில் ருந்து காணாமல் போங்க நிறைய சந்தர்ப்பங்கள் இந்த கருப்பு ஆடுகளால் நீரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X