ஆக்சிஜன் டேங்கர்களை தடுக்கும் மாநிலங்கள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: டில்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர்களை, சில மாநிலங்கள் தடுப்பதாகவும், இதில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.இந்த கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆக்சிஜனை வழங்கிய மத்திய அரசுக்கு
Arvind Kejriwal, Aam Aadmi Party, Kejriwal, ஆம் ஆத்மி, கெஜ்ரிவால், டில்லி, ஆக்சிஜன், மாநிலங்கள்,

புதுடில்லி: டில்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் டேங்கர்களை, சில மாநிலங்கள் தடுப்பதாகவும், இதில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆக்சிஜனை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. ஆக்சிஜன் அளவு அதிகரித்தாலும், அதனை டில்லிக்கு கொண்டு வர உதவ வேண்டும். ஆக்சிஜன் தேவைக்காக பல மாநிலங்களை டில்லி நம்பி உள்ளது. மே.வங்கம், ஒடிசாவில் இருந்து ஆயிரம் டன் ஆக்சிஜன் வர வேண்டி உள்ளது. ஆனால், டில்லிக்கு வரும் ஆக்சிஜன் டேங்கர்களை பல மாநிலங்கள் தடுக்கின்றன. இந்த பிரச்னையில் மத்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


latest tamil newsஆக்சிஜன் பிரச்னையால், டில்லி மருத்துவமனைகள் கடும் சிக்கலில் உள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பேரழிவு ஏற்படும். இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வராக இருந்தும், மக்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
24-ஏப்-202107:20:57 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga பாவம் உங்களால் எந்த ஒரு செயலையும் செய்ய இயலவில்லை. எதெற்கெடுத்தாலும் பிறரையே குற்றம் காணும் நீங்கள், ஏன் களத்தில் இறங்கி அந்தந்த மாநில முதல் அமைச்சர்களுடன் பேசி தக்க நடவடிக்கை எடுக்க கூடாது? மோடியையே குறை கூறிக்கொண்டு இருக்கும் நீங்கள், பேசாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் . உங்கள் உடல்நலநை முதலில் கவனித்து கொள்ளுங்கள். இந்த கடும் கோடை காலத்திலும் ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு நல்ல ஸ்வேட்டர் போட்டுகொண்டு இருக்கிறீர்கள். மக்கள் எக்கேடு கேட்டால் உங்களுக்கு என்ன.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-ஏப்-202118:52:46 IST Report Abuse
M  Ramachandran இந்த ஆளை எப்படி அண்ணா அசாரே சிஷ்யனாக யேற்றாரோ தெரிய வில்லை. காற்றில் குப்பை கோபுரத்தில் ஏரி விட்டது.ஷீலா தீட்ஷித் போனற திறமையானவர்கள் ஆட்சி செய்த இடத்தில் இவர்.
Rate this:
sivan - seyyur,இந்தியா
24-ஏப்-202105:19:50 IST Report Abuse
sivan ஷீலா தீட்ஷித்தா? திறமையாக ஆட்சி செய்தாரா? அது எப்போது?...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
23-ஏப்-202118:43:11 IST Report Abuse
S. Narayanan எல்லாத்துக்கும் மோடியை எதிர்பார்த்தால் இவர்கள் எதற்கு. ஒப்புக்கு சப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X