கொரோனா உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம்; ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஐசியூ படுக்கைகள் இல்லாததால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்கு மத்திய அரசே காரணம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று (ஏப்.,22) ஒரேநாளில் நாடு முழுவது 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றால்
Rahul, CovidDeaths, Centre, Oxygen, Shortage, ராகுல், காங்கிரஸ், கொரோனா, உயிரிழப்பு, மத்திய அரசு, ஆக்சிஜன், பற்றாக்குறை

புதுடில்லி: இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஐசியூ படுக்கைகள் இல்லாததால் தான் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்கு மத்திய அரசே காரணம் எனவும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று (ஏப்.,22) ஒரேநாளில் நாடு முழுவது 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில், ‛நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு வேண்டுமானால் கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐசியூ படுக்கைகள் இல்லாததால் தான் பல இறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கமே, இது உங்களால் தான்,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-202115:30:17 IST Report Abuse
Rafi அரசு நீண்ட கால திட்டத்திற்கு யோசித்து செயல் பட வேண்டும். நம் கலைஞர் முதல்வராக இருந்த பொது தமிழகத்தில் உள்ள முக்கிய மருத்துவ மனைகளில் தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை உற்படுத்தி கொள்ளக்கூடிய ஆற்றலோடு கூடிய மருத்துவமனைகளை நாட்டிற்கு வழங்கி இந்தியா அரசிற்கு முன்மாதிரியாக இருந்துள்ளார்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஏப்-202111:40:36 IST Report Abuse
vbs manian எதற்கும் தான் தகுதியில்லை என்று நாள் தோறும் நிரூபித்து வருகிறார். துரதிர்ஷ்டம் ஊடகங்கள் இந்த உளறலை தாங்கி பிடிக்கின்றன.
Rate this:
Cancel
24-ஏப்-202110:49:22 IST Report Abuse
கோகுல், மதுரை நாடு ம.தொகை பாதிப்பு உயிரிழப்பு US 33cr. 3.26cr. 5.84L Brazil 21cr. 1.41cr. 3.83L Russia 14.4cr. 47.4L. 1.07L France 6.71cr. 54L. 1.02L UK. 6.66 cr. 44L. 1.27L India 136.6 cr. 1.65cr 1.88L மக்கள் தொகை அடிப்படையில் இதை ஒப்பிட்டு பார்க்கவும்.பொருளாதாரத்தில் முழு வளர்ச்சி அடைந்த நாடுகளே திண்டாடுகின்றன. உயிரிழப்புகளின் ஏன் கீழ்தரமான அரசியல் செய்கிறீர்கள்.அரசியல் வேண்டாமே!!! மனித நேயம் ஓங்குக!!!
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
24-ஏப்-202117:04:29 IST Report Abuse
Rafi சீனா மக்கள் தொகையில் நம்மை விட கூடுதலாக இருந்தும் உயிரிழப்புகள், மற்றும் பாதிப்புகளை திறமையான நடவடிக்கையின் மூலம் மீண்டார்களே, அவர்கள் கை தட்டவில்லை, கேண்டில் தூக்கி சொல்லவில்லை உலகம் அப்போதே ஏளனம்மாக பார்த்தார்கள், விளைவு இதிலிருந்து மீளும்மா? என்ற ஐயப்பாட்டிற்கு நாட்டை வழிநடத்தி கொண்டிருக்கின்றார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X