பொது செய்தி

இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு: பிரதமர் உறுதி

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி ; கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.கொரோனாவின் 2வது அலை இந்தியாவில்வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சிகிச்சையில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, பிரதமர் மோடி,  முதல்வர்கள், நரேந்திர மோடி, ஆலோசனை

புதுடில்லி ; கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

கொரோனாவின் 2வது அலை இந்தியாவில்வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சிகிச்சையில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். காலையும், மதியமும் இந்த ஆலோசனை நடந்தது.


latest tamil newsஇந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒரே நாடாக இணைந்து செயல்பட்டால், எந்த தட்டுப்பாடும் ஏற்படாது. ஆக்சிஜன் டேங்கர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்லவும், பயண நேரத்தை குறைக்கவும் ரயில்வே, விமானப்படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய மருந்துகள், ஊசிகளை கள்ளச்சந்தையில் பதுக்குவதை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளின் பாதுகாப்பை புறக்கணித்து விடக்கூடாது. பீதி ஏற்படுவதை தடுக்க, விழிப்புடன் செயல்பட வேண்டும்.


latest tamil news


மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகளுக்கு மாநில அரசுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். ஆக்சிஜன் டேங்கர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். ஒருமித்த முயற்சியுடன் இணைந்து இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுத்து நிறுத்த முடியும். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும். மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவதை கண்காணிக்க மாநில அரசுகள் உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
24-ஏப்-202100:02:43 IST Report Abuse
PANDA PANDI அவரவர் கர்மா அவரவருடையது. டீக்கடை வெச்சவரெல்லாம் பிரதமராக முடியாது. முதல்வரின் மகனெல்லாம் முதல்வராக முடியாது. சின்னம்மா காலில் விழுபவரெல்லாம் முதல்வராக முடியாது. ஆனா, கொரோனா வந்தால் சித்ரவதை, பிரதமர் டீ வித்திருக்கலாம். முதல்வரின் தந்தை முதல்வராயிருந்திருக்காரு. ஒரு முதல்வர் சின்னம்மா காலில் விழுந்திருக்காரு. பகவத் கீதையில் கண்ணன் சொல்வது அதுவே. கர்மண்யேவா திகாரஸ்த்தே மா பலேஷு கதாசன...
Rate this:
Cancel
nass - ,
23-ஏப்-202123:13:24 IST Report Abuse
nass PM proves he not educated just flofering and propaganda 🙄 dance sound fire biggest achievements in this world by modi
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202122:03:28 IST Report Abuse
தல புராணம் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.. இவர் அல்லும்பகலும் வெறும் கல்லாய் இருந்து விட்டு காங்கிரஸ் மேலே தான் பழியை சொன்னார்.. பொறுத்து கொண்டோர் எல்லாம் விழித்து கொண்டார்.. இவர் போல குறட்டை விட்டோர் எல்லாம் விரட்டப்பட்டார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X