பொது செய்தி

இந்தியா

அலறவிடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா எனும் கொடிய நோயால் மூச்சு விட முடியாமல் இந்தியா திணறுகிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது. அந்தளவுக்கு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பலரும் டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த முறையை விட இந்த முறை நோயின் தன்மை
COVIDEmergency2021, IndiaNeedsOxygen, OxygenShortage

புதுடில்லி : கொரோனா எனும் கொடிய நோயால் மூச்சு விட முடியாமல் இந்தியா திணறுகிறது என்று தான் சொல்ல தோன்றுகிறது. அந்தளவுக்கு நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பலரும் டுவிட்டரில் டிரெண்ட் செய்கின்றனர்.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவி வருகிறது. கடந்த முறையை விட இந்த முறை நோயின் தன்மை தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் எடுக்கப்பட்டாலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும் சிரமங்கள் தான் தற்போது நாடு முழுக்க பேசும் விதமாக மாறி உள்ளது.

பல மாநிலங்களில், ஆக்ஸிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாததால் புதிதாக நோயாளிகள் யாரையும் சேர்க்கவில்லை என பேனர் வைக்கும் அவலங்கள் நிலவுகின்றன. இந்தப் பிரச்னைகள் குறித்து, பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


latest tamil news


இது தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், மத்திய அரசுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது. 'பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது திருடுங்கள். ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் போனதாக ஒரு செய்தி கூட வரக் கூடாது' என, கூறியது. மேலும் இப்பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து இந்த பிரச்னை தொடர்பான வழக்கை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பிரச்னை சமூகவலைதளமான டுவிட்டரில் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பிடிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதை காண முடிகிறது. இதுதொடர்பாக பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கையில் ஆக்ஸிஜன் உடன் மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி ஒருவர் அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலரும் மருத்துவமனை நோக்கி படையெடுப்பதும், அங்கு ஸ்டெச்சரில் நோயாளிகளுடன் சிகிச்சைக்காக அவர்கள் வரிசையில் காத்திருப்பதும், நோயாளிகளை பார்த்து அவர்கள் கதறும் வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் காண முடிகிறது. மேலும் ஒரே படுக்கையில் இரண்டு, மூன்று நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அவல நிலைகளையும் காண முடிகிறது. டூவீலரில் ஆக்ஸிஜன் உதவியோடு மருத்துவமனைக்கு ஒரு பெண் செல்லும் போட்டோ ஒன்றும் அதிகம் வைலரானது.


latest tamil news


மாநிலத்தின் பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற அவர்கள் வந்த ஆம்புலன்ஸ் நீண்ட வரிசையில் நிற்பதை காண முடிகிறது. மேலும் கொரோனாவால் சிகிச்சை பலன் இன்றி இறந்தவர்களை குவியல் குவியலாக எரிப்பதையும், சாலைகளில் அவர்களுக்கு இறுதி சடங்கு நடப்பதையும், இறுதி சடங்கு நடக்கும் இடங்களில் இறந்தவர்கள் உடல் உடன் நீண்ட வரிசையில் உறவினர்கள் நிற்பதையும் காண முடிகிறது.

இந்த அவலங்களை எல்லா சுட்டிக்காட்டி பலரும் தங்களது கருத்துக்களை #CoronavirusPandemic, #COVIDEmergency2021, #IndiaNeedsOxygen, #OxygenShortage உள்ளிட்ட பல ஹேஷ்டாக்குகளில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் பதிவான கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்....


latest tamil news


* உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்க, இந்தியாவில் மட்டும் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அமைச்சர்கள், மாநில அரசுகளின் முதல்வர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்தினர்.
* மிக உயர்ந்த சர்தார் பட்டேல் சிலை, இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டேடியம், ராமர் கோவில் கட்ட நிதி எல பல ஆயிரம் கோடிகளை வாரி இறைந்த மத்திய அரசு அடிப்படை மருத்துவ தேவைகளுக்கு ஒதுக்கி இருக்கலாம்.
* ஆக்ஸிஜன் சப்ளை இல்லாததால் கொரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கிய தங்கள் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் பெரும்பாலான குடும்பங்கள் போராடி வருகின்றனர். என்ன கொடுமை இது. சுவாசிக்க கூடி முடியாமல் இந்தியா திணறி வருகிறது.
* ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் தங்களது நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் நிலையை பார்க்க முடியாது. இது தான் நாட்டின் முன்னேற்றமா, வளர்ச்சியா...
* 1947ல் சுதந்திரத்திற்காக போராடினோம். 2021ல் ஆக்ஸிஜனுக்காக போராடுகிறோம்.
* பிளாஸ்டிக், மரங்கள் வெட்டி சாய்ப்பு என இயற்கையை நாம் அழித்தோம். இப்போது இயற்கை தன் கோர முகத்தை காட்டுகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் இப்போது திணறுகிறோம்.
* இது முழுக்க மத்திய மாநில அரசுகளின் தோல்வியை தான் காட்டுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கோட்டை விட்டு விட்டது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகளை நமக்கு முதலில் வழங்காமல், அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, இப்போது நமக்கு தடுப்பூசி இல்லாமல் திண்டாடி வருகிறோம்.
* நாடு தற்போது உள்ள நிலை தொடர்ந்தால் இந்தியாவிலும் எங்கு பார்த்தாலும் பிண குவியல்களை தான் காண முடியும். மத்திய, மாநில அரசுகளே விழித்து கொள்ளுங்கள். ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க வழி செய்யுங்கள். தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்யுங்கள்.
* எங்களுக்கு கோயில் வேண்டாம், விளையாட மைதானங்கள் வேண்டாம், மிக உயர்ந்த ஒற்றுமை சிலை வேண்டாம். உயிர் வாழ ஆக்ஸிஜன் கொடுங்கள்.
இதுப்போன்று பலரும் தங்களது ஆதங்கத்தை கருத்துக்களாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய விமானப்படை ஆக்ஸிஜன் கண்டெயினர் லாரிகளை தேவையான இடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க களத்தில் இறங்கி உள்ளது. மேலும் பல தன்னார்லவர்களும் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கி வருகின்றனர். இதுதொடர்பான போட்டோக்களும் சமூகவலைதளங்களில் காண முடிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
24-ஏப்-202108:45:58 IST Report Abuse
Ellamman புல்லட் ரயில்.... அது மட்டும் தான் மோடியின் எண்ணத்தை ஆக்கிரமித்துள்ளது... அந்த திட்டத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒத்துழய்ப்பு தராததால் அந்த அரசை ஆட்டம் காண வைக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்கிறது... அது கொரோனா தடுப்பு நடவடிக்கை என்றால் கூட மகாராஷ்டிரா அரசு தடுமாறுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பின்மையே காரணம்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202122:13:59 IST Report Abuse
தல புராணம் உள்துறை அமைச்சர் இன்னமும் கல்கத்தாவில் நட்சத்திர ஓட்டலில் இருந்து கொண்டு மாநிலத்தில் கூட்டம் கூட்டி கொரோனாவை பரப்பிக்கொண்டு இருக்கார்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202122:04:51 IST Report Abuse
தல புராணம் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்.. இவர் அல்லும்பகலும் வெறும் கல்லாய் இருந்து விட்டு காங்கிரஸ் மேலே தான் பழியை சொன்னார்.. பொறுத்து கொண்டோர் எல்லாம் விழித்து கொண்டார்.. இவர் போல குறட்டை விட்டோர் எல்லாம் விரட்டப்பட்டார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X