பொது செய்தி

இந்தியா

மே, ஜூன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியங்கள்: மத்திய அரசு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: வரும் மே, ஜூன் மாதங்களில் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.கடந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து குறிப்பிட்ட மாதங்களுக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், நாடு
GOI, FoodGrains, PoorPeople, Free, இலவசம், உணவு தானியங்கள், ஏழைகள்

புதுடில்லி: வரும் மே, ஜூன் மாதங்களில் ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்தபோது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து குறிப்பிட்ட மாதங்களுக்கு ரேஷன் அட்டை தாரர்களுக்கு உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இதனால் மீண்டும் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனைபோக்க, பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், சுமார் 80 கோடி பேர் பயனடைவர் என்றும், இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-202100:35:03 IST Report Abuse
Pugazh V இலவசங்களை எதிர்த்து கதறிய கும்பல் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். கலைஞர், ஜெயலலிதா இலவசங்களை கொடுத்தால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் கூட்டம் இப்போது ஆஹா ஓஹா என்று காவடி ஆடுகிறார்கள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-ஏப்-202121:50:56 IST Report Abuse
தல புராணம் மோடிஜியின் கருணை - வாய்க்கரிசி திட்டம்..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஏப்-202120:46:48 IST Report Abuse
Ramesh Sargam சரியான முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X