ஆக்சிஜனை பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கொடுப்பதா?: மம்தா கோபம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு திருப்பி விட்டால், ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.நாட்டில் கொரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
MedicalOxygen, Diverted, BJP_RuledStates, Mamata, WestBengal, மேற்குவங்கம், ஆக்சிஜன், பாஜக, மாநிலங்கள், மம்தா

கோல்கட்டா: மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப்பிரதேசம் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு திருப்பி விட்டால், ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன், படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் அடுத்த இரு வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படும் எனவும், வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜனை ஒதுக்குவதால் மே.வங்கத்தில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவர், என அம்மாநில அரசு நேற்று (ஏப்.,22) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பேசியதாவது:


latest tamil news



மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை உத்தரப் பிரதேசத்திற்கு திருப்பி விடப்படுகிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. மேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டியதை திருப்பிவிட்டால் ஆக்சிஜனுக்கு நாங்கள் என்ன செய்வது?. அவர்கள் (பா.ஜ.,) மேற்கு வங்கத்தை கைப்பற்ற நினைக்கின்றனர். ஆனால், ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தருகின்றனர். மத்திய அரசின் இந்த மாற்றான்தாய் மனப்பான்மை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayan -  ( Posted via: Dinamalar Android App )
24-ஏப்-202112:39:19 IST Report Abuse
narayan ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியிலிருக்கிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது பா.ஜ.க.தான்! ஆனால், பிரதமர் மோடியோ அவரது அமைச்சர்களோ முதல்வர் நவீனை கண்டபடி விமர்சித்ததில்லை! முதல்வரும் பிரதமரை தடித்த வார்த்தைகளால் ஒருபோதும் சாடியதில்லை. இத்தனைக்கும் அங்கே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டசபையில் பலமாக மோதிக்கொள்கின்றன! கண்டன ஆர்பாட்டங்கள், அரசியல் ரீதியான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் கனஜோராக நடக்கின்றன! மஹாராஷ்டிரா, மே.வங்கம், ராஜஸ்தான், டில்லி போன்ற எதிர்க்கட்சியாளும் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ஒடிசா நிலவரம் வியப்புக்குரியதாக விளங்குகிறது! தங்கள் இயலாமையை மறைக்க, கண்டதற்கெல்லாம் மத்திய அரசு மீது பழியைப்போட்டு தப்பிக்க நினைக்கும் இவர்கள் எங்கே! மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ளாமல், ஆனால், அதேசமயம் தனது அரசியல் தனித்துவத்தை இழக்காமல் ஆட்சி புரியும் நவீன் எங்கே! ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்பது இதுதான்! அதனால்தான் நாடாளுமன்றத்திற்கு, பா.ஜ.க.வுக்கு வாக்களித்தவர்கள்கூட மாநிலத்திற்கு நவீனையே தேர்ந்தெடுத்தனர்! இத்தகைய ஒரு சிறப்பான மத்திய-மாநில உறவு நிலவ காரணம், மோடியும் சரி, நவீனும் சரி, தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல் பேசும் அரசியல்வாதிகளாக விளங்குவதுதான்! இந்நேரத்தில் இங்கே ஒன்றை குறிப்பிட்டேயாக வேண்டும்! ஒடிசாவிலிருந்து போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டு, ஐந்து மாநிலங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது! அங்கே அரசியல் பேசாத முதல்வர், அவரது அனைத்து நடவடிக்கைகளையும் அரசியலாக்காத எதிர்க்கட்சி இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது! ஆனால், நம்ம ஊரில்? ஆக்ஸிஜன் தயாரிக்க தொடங்கவிருக்கும் ஆலைக்கு எதிராக கோஷம், போராட்டம், கருத்துக்கேட்பு, கூட்டத்தில் கல்வீச்சு!!
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஏப்-202111:26:34 IST Report Abuse
vbs manian மேடம் அந்த சாரதா சீட் பண்டு சில்வர் வாலி லாட்டரி விவகாரம் என்னவாயிற்று.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஏப்-202111:22:10 IST Report Abuse
vbs manian பேச்சும் நடவடிக்கையும் சிறுபிள்ளை தனமாக உள்ளது. மேற்கு வங்கத்தை எந்த விதத்திலும் முன்னேற்றவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X