பொது செய்தி

இந்தியா

இந்திய விமானப்படை விமானங்களில் பறக்கும் ஆக்சிஜன் கன்டெயர்னர்கள்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: ஆக்சிஜன் வினியோகத்தை துரிதபடுத்துவதற்காக, ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு, கன்டெயர்னர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும்
ஆக்சிஜன், இந்திய விமானப்படை, கன்டெய்னர்கள், கொரோனா, மருத்துவமனை, விமானங்கள், iaf, corona, oxygen,

புதுடில்லி: ஆக்சிஜன் வினியோகத்தை துரிதபடுத்துவதற்காக, ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு, கன்டெயர்னர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.


latest tamil news


இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், விரைவாக கொண்டு செல்லவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக, உற்பத்தியாளர்களுடன் பிரதமர் மோடி இன்று(ஏப்.,23) ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


இந்நிலையில், ஆக்சிஜனை விரைவாக நிரப்பி, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஏதுவாக, ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு கன்டெயர்னர்கள் இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக விமானப்படைக்கு சொந்தமான சி-17. ஐஎல்-76 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த, உ.பி.,யில் இருந்து விமானங்களில், காலியான இரண்டு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கன்டெய்னர்களும், மற்றொரு. ஐஎல்- 76 விமானம் ஒன்றில், காலியான கன்டெயர்னர், மே.வங்கத்தின் பனகார்க் நகருக்கு எடுத்து செல்லப்பட்டது.


latest tamil news


தெலுங்கானாவின் பேகம்பேட்டை விமான நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு ஆக்சிஜன் நிரப்புவதற்காக காலி டேங்கர்களை காெண்ட லாரிகள், இந்திய விமானப்படை விமானங்கள் கொண்டு செல்ல உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
24-ஏப்-202108:43:59 IST Report Abuse
Ellamman தோல்வியின் விளிம்பில் இருக்கும்போது இல்லை முற்றிலும் தோல்வி அடையும் போது பாதுகாப்பு படையினரை துணைக்கு அழைத்துக்கொள்வது... அவர்கள் மூலம் நாட்டு மக்களை திசை திருப்புவது.....மக்கள் மனதில் மாயையை ஏற்படுத்துவது.... அவர்களின் தியாகத்தை சாதகமாக்கிக்கொள்வது... இது எல்லாம் புதிதில்லை...என்ன... இங்கு பாகிஸதானயோ இல்லை சீனாவையோ கூட சேர்த்து இழுக்கமுடியவில்லை... அது மட்டும் தான் பாக்கி....நிலைமை கைமீறினால் அதை கூட இழுத்துவிட்டுவிடுவார்கள்....
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
24-ஏப்-202108:41:32 IST Report Abuse
Ellamman புகைப்படங்களை வெளியிட்டு மக்களை ஒரு விதமான ஆழ்நிலை தூக்கத்தில் வைத்திருப்பது ஹிட்லர் காலத்தில் இருந்து நடைபெறும் நடைமுறை..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-ஏப்-202100:28:36 IST Report Abuse
Pugazh V நாலஞ்சு காலி டேங்கர் களைக் கொண்டு சென்றார்களாம். இதுக்கே இந்த அளவுக்கு பீத்திக்கறாங்க??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X