மாநில அரசுகள் ஒன்று சேர வேண்டும்; சிதம்பரம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க கோரி மருந்து உற்பத்தியாளர்களை, ஒன்று சேர்ந்து மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு
Chidambaram, CovidVaccine, SamePrice, Congress, கொரோனா, தடுப்பூசி, ஒரேவிலை, சிதம்பரம், காங்கிரஸ்

புதுடில்லி: இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க கோரி மருந்து உற்பத்தியாளர்களை, ஒன்று சேர்ந்து மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனமானது, 3 விதமான விலை கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.

அதாவது ஒரு டோஸ் மருந்தின் விலை, மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்., மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: மத்திய அரசின் தடுப்பூசிக்குப் பல விலைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளித்திருப்பது பாகுபாடானது, பிற்போக்குத்தனமானது. மாநில அரசுகள் ஒன்றுசேர்ந்து இந்த முடிவைப் புறக்கணிக்க வேண்டும்.


latest tamil news


மாநிலங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விலை பேச்சுவார்த்தைக் குழுவை ஏற்படுத்தி முன்னெடுப்பதுதான் சிறந்த வழி. இந்தப் பேச்சுவார்த்தைக் குழு 2 மருந்து நிறுவனங்களுடன் பேசி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு ஒரே மாதிரியான விலை வைக்கப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க கோரி மருந்து உற்பத்தியாளர்களுக்கு மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து தவறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்ட சரணடைந்துவிட்டது. இவ்வாறு சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-ஏப்-202111:38:40 IST Report Abuse
vbs manian கார்போரேட்டுகளுக்கு பக்க பலமாய் இருந்தவர் இப்போது அவர்களுக்கு எதிரி. கட்டுபடியாகாது என்று அவர்கள் இழுத்து மூடினால் என்னாகும். இஸ்ரலில் இதே பிரச்சினை எழுந்த பொது அந்த நாட்டின் பிரதமர் ஊசி விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை. ஊசி இல்லாமல் ஊரடங்கு விதித்து அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஊசி விலையை விட மிக அதிகமாயிருக்கும் என்று சொல்லி ஊசி கம்பெனிகள் கேட்ட விலையை கொடுத்தார். இங்கு மோடி மீதுள்ள காழ்ப்புணர்ச்சி பலவிதங்களில் வெளிப்படுகிறது. ஹார்வேர்டாயிருந்தாலும் சரி டூன் வாலியானாலும் சரி. மோடி நல்ல பெயர் வாங்க கூடாது.
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
24-ஏப்-202111:23:43 IST Report Abuse
Dr. Suriya வயதானாவே ... தானா பொலம்புர புத்தி பேதலிப்பு வந்துவிடும்....
Rate this:
Cancel
V.Ramesh kumar - RAJAPALAYAM,இந்தியா
24-ஏப்-202111:15:33 IST Report Abuse
V.Ramesh kumar ஏன் லாக்டவுன் போடல? போட்டா ஏன் போட்ட ? வாக்சின் ஏன் கண்டுபிடிக்கல ? கண்டுபிடிச்சு வந்தா , இலவசமா குடுப்பியா ? இலவசமா கொடுத்தா , நான் போடமாட்டேன் முதல்ல நீ போடு. போட்டுக்கிட்டா எனக்கு கோவாக்ஸின் தான் வேணும். தேர்தல் வச்சா , மக்கள் மேல அக்கறை இல்ல, வைக்காட்டி ஆளும்கட்சிக்கு தோத்துருவோம்னு பயம். ஊர் சுத்தாதனா அப்படிதான் சுத்துவேன் , ஊரடங்கு அறிவிச்சா ஏன் அறிவிச்ச , அறிவிக்கலைனா ஏன் செய்யல. பள்ளிக்கூடத்தை திறந்தா ஏன் திறந்தே , திறக்காட்டி மாணவர்கள் மேல் அக்கறை இல்ல. எக்ஸாம் கேன்சல் பண்ணா ஏன் பண்ணினே , பண்ணாட்டி எதிர்காலம் கேள்வி குறி. பஸ்ஸர்வீஸ் அராம்பிச்சா ஏன் ஆரம்பிச்ச , இல்லைனா ஏழைகள் மேல அக்கறை இல்ல. என்னடா உங்க பிரச்சனை... ஒரு பொறுப்பற்ற சமூகத்தை வைத்துக்கொண்டு எல்லோரையும் அனுரசரித்து ஆட்சி நடத்துவதென்பது சாதாரண வேலை அல்ல... நாட்டு குடிமகன் என்று நமக்கு இருக்கின்ற பொறுப்பை தட்டி கழித்து எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறும் சமூகம் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இது தான் சொல்ல வந்த விசயம் 😂😂😂 நம்மால் இன்னுமே மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து கொடுக்கும் ஒரு சிரு வேலையை கூட செய்ய முடியவில்லை... சிந்திக்க வேண்டும் பின்னரே செயல்பட வேண்டும் 🙏🙏🙏🙏🙏
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X