ஆலோசனை கூட்ட உரை டிவியில் ஒளிபரப்பு: மன்னிப்பு கேட்டார் கெஜ்ரிவால்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உரை டிவியில் ஒளிபரப்பானது. இதற்கு ஆட்சேபனை எழுந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார்.கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால்
Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்

புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உரை டிவியில் ஒளிபரப்பானது. இதற்கு ஆட்சேபனை எழுந்ததை தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியது டிவிகளில் ஒளிபரப்பானது. ஆலோசனை கூட்டம் முடிவதற்கு முன்பே ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்தும் அதில், தேசிய அளவிலான கொள்கை அமலாக்கம், அதை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் விடுவது குறித்து பேசி இருந்தார். ஆனால், வழக்கமாக பிரதமர் நடத்தும் ஆலோசனை கூட்டங்கள் டிவிக்களில் ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை. இதை மீறி கெஜ்ரிவால் உரை முதன்முறையாக வெளியானது.

இதனை கூட்டத்தில் இருந்த பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு மோடி ஆட்சேபனை தெரிவித்தார். டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது எந்த வகையிலும் முறையானது அல்ல. இந்த விவகாரத்தில் விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என தெரிவித்தார். இதனையடுத்து கெஜ்ரிவால், ஆலோசனை கூட்டத்திலேயே மன்னிப்பு கேட்டார்.


latest tamil news


இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திய கெஜ்ரிவால், தவறான தகவலை தெரிவித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தை டிவியில் ஒளிபரப்பு கூடாது. ஆனால், முதல்முறையாக முதல்வர்களுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் நடத்திய ஆலோசனை கூட்டம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லாமல், அரசியல் செய்வதிலும், பொறுப்பில் இருந்து தப்பிக்கும் வகையிலுமே கெஜ்ரிவால் பேசினார் என தெரிவித்தன.

இதன் பின்னர் கெஜ்ரிவால் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று (ஏப்.,23) நடந்த ஆலோசனை கூட்டத்தை டிவியில் ஒளிபரப்பு செய்யக்கூடாது என மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ எந்த தகவலும் வரவில்லை. கடந்த காலங்களில், பொது மக்கள் தொடர்பான பிரச்னைகள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இருப்பினும், தற்போது நடந்ததற்கு பிரச்னை இருந்தால், அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gandhi - Chennai,இந்தியா
27-ஏப்-202112:16:43 IST Report Abuse
Gandhi இவன் ஒரு மீடியா பைத்தியம். கடந்த மூன்று மாசத்தில் 150 கோடி செலவு பண்ணி தன்னை விளம்பரபடுத்துகிறான். டெல்லி மக்களுக்கு பிரச்சனை வந்தால் மோடியை பலிகடாவாக்க முயற்சிக்கிறான்.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
24-ஏப்-202113:02:12 IST Report Abuse
Chakkaravarthi Sk அரவிந்த் கெஜ்ரிவால் இதை டெல்லி மக்களுக்கு தன் பெயரில் எந்த தப்புமே கிடையாது எல்லா பிரச்சினைகளுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசே கரணம் என்று புரிய வைத்து விட்டார். ஒரு வேலை இந்த பிரச்சினைகள் சுமுகமாக தீர்ந்து விட்டால், எல்லா பாராட்டுக்களும் அவருக்கு தான், தவறு என்றால் மோடி தான். சூப்பர் . கமல் சரியாக தான் நண்பர்களை கண்டு கொண்டுள்ளார்.
Rate this:
Cancel
Raj - nellai,பஹ்ரைன்
24-ஏப்-202113:02:12 IST Report Abuse
Raj நாட்டு மக்களிடம் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X