பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.23) 13 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 8,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.43 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,23) 13,732 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.23) 13 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் கொரோனா பாதித்த 8,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.43 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,23) 13,732 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,51,487ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-194) மூலமாக, இன்று மட்டும் 1 லட்சத்து 25 ஆயிரத்து 593 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 456 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 8,432 பேர் ஆண்கள், 5,344 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 6,34,824 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 4,16,625 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 38 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 8,078 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 43 ஆயிரத்து 044 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 44 பேர் தனியார் மருத்துவமனையிலும் 34 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,395 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 95,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
24-ஏப்-202109:59:40 IST Report Abuse
MURUGESAN வீடுதோறும் சென்று பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி போடும் பணியை அரசுகள் முறைப்படுத்தி செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X