மே.வங்கத்தில் எதிர்வரும் 7, 8ம் கட்டத் தேர்தல்; சூடுபிடிக்கும் பிரசாரம்

Updated : ஏப் 23, 2021 | Added : ஏப் 23, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆறாவது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.இந்தியாவின் அரசியல் கவனத்தை அதிகம் பெறும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது ஆட்சியைப்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆறாவது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.latest tamil newsஇந்தியாவின் அரசியல் கவனத்தை அதிகம் பெறும் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவிவருகிறது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. முந்தைய ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி அரசுக்கு எதிராக காரசாரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.பொதுமக்கள் நலன் கருதி அனைத்து கட்சிகளும் தற்போது அதிக இடங்களை தவிர்த்து பிரச்சார பேரணி நடத்தி வருகின்றனர்.இளைஞர்கள், சிறுதொழில் முனைவோருக்கு ஊக்கம்


பாரத பிரதமர் மோடி இதில் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில்,
'மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் 7,8ம் கட்ட சட்டமன்ற தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக மட்டுமே இருக்காது. பாகுபாடின்றி மேற்கு வங்க மக்கள் அனைவருக்கும் சரிசமமாக வாய்ப்புகள் வழங்க மக்கள் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் சிறு தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளிக்கவும் பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தங்கள் பள்ளி காலத்திலேயே தொழில் சார்ந்த கல்வியை அளிப்பது அவசியம். மேலும் அவர்கள் விருப்பப்பட்ட மொழியில் பாடங்களை பயிற்றுவிக்க வேண்டியது அரசின் கடமை. எங்களது கூட்டணி இந்த அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsநடந்து முடிந்த ஆறாம் கட்ட சட்டசபை தேர்தலில் 80.88 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அந்த மாநிலத்தின் தேர்தல் கமிஷன் தகவல் அளித்துள்ளது. ஏழாவது மற்றும் எட்டாம் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
24-ஏப்-202112:27:17 IST Report Abuse
Raj இரண்டாவது அலை பயங்கரமாக இருக்கும் என நவம்பர் மாதத்தில் இருந்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. எல்லாநாடுகளும் வேண்டிய பாதுகாப்பு ஏர்பாடுகளை கவனித்து வந்தது. ஆனால் பிரதமரோ தர்போது தான் அக்ஸிசன் கையிருப்பு பற்றி ஆலோசனை நடத்துகிறார். கும்பமேளா நடத்தி கொரோனாவோடு கும்மி அடிக்கிறார். இவர்கள் நடத்திய பேரணிகளிலேயே கூட இவர்கள் உள்ளபட்ட எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை, இந்தியாவில் மிகபெரிய அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதற்கு இந்த கையாலாகாத பயங்கரவாதிக்கே காரணம்
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
24-ஏப்-202113:52:17 IST Report Abuse
Suppanஎந்த அரசியல் கட்சி கொரோனவோடு கும்மியடிக்கவில்லை. இதைக் கண்டிக்க எந்த அரசியல் கட்சிக்கும் யோக்கியதை இல்லை. எல்லோருமே குற்றவாளிகளே உயிர் காக்கும் ஆக்ஸிஜன் விஷயத்தில் கேடுகெட்ட கோபால்சாமி, மருத்துவர் எழிலன் (வெட்கக்கேடு. இவரெல்லாம் மருத்துவரா?), தூத்துக்குடி போராளிகள் என்ற போர்வையில் உலவும் சமூக விரோதிகள் செய்யும் அரசியல் அலப்பறையில் பொது மக்களின் ஆத்திரம் சொல்லி மாளாது. இவர்கள் எல்லோரையும் கூண்டோடு நாடு கடத்தி தலிபான்கள் மத்தியில் விட வேண்டும்....
Rate this:
Cancel
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) எந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்னு தேர்தலே குறியா இருக்கிற பிரதமரை நாடு முதல் முறையாக பார்க்கிறது.
Rate this:
Raj - nellai,பஹ்ரைன்
24-ஏப்-202113:04:09 IST Report Abuse
Rajமிக மிக சரி...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஏப்-202116:05:14 IST Report Abuse
Malick Rajaஇதை தான் தேசத்துரோகமான கருத்து என்று சொல்வதற்கு கூலிகள் வருவாங்க...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
24-ஏப்-202111:23:10 IST Report Abuse
sahayadhas இவனுங்க பதவிக்காக மீதி இருக்க ஜனங்களை கொல்லாம விடமாட்டானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X