புதுடில்லி,: ''சிறப்பாக பணியாற்றிய மனத்திருப்தியுடன் ஓய்வு பெறுகிறேன்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின், 47வது தலைமை நீதிபதியாக, 2019 நவம்பரில், எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்; இன்று ஓய்வு பெற்றார். இதையடுத்து நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில், எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது: நீதிபதியாக, 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சிறப்பாக பணியாற்றிய திருப்தியுடனும், மலரும் நினைவுகளுடனும் ஓய்வு பெறுகிறேன்.
தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, எனக்குசக நீதிபதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். அதனால், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடிந்தது. கொரோனா பரவலின் போது, நேரடி விசாரணை, 'வீடியோ கான்பரன்சிங்' விசாரணையாக மாறியது. இதிலும், உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, என்.வி. ரமணா நாளை பதவியேற்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE