முக்கிய பொறுப்பிலிருந்து ஹரீஷ் சால்வே விலகல்

Added : ஏப் 23, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆக்சிஜன் வினியோகம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே நியமிக்கப்பட்டதற்கு விமர்சனம் எழுந்ததை அடுத்து, அந்த பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் வினியோகம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில்,
 முக்கிய பொறுப்பிலிருந்து ஹரீஷ் சால்வே விலகல்

புதுடில்லி:ஆக்சிஜன் வினியோகம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே நியமிக்கப்பட்டதற்கு விமர்சனம் எழுந்ததை அடுத்து, அந்த பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.

ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் வினியோகம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ, 'அமிகஸ் கியூரி'யாக செயல்பட, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை, நீதிபதிகள் நியமித்தனர். இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நடந்தது.

அப்போது, ஹரீஷ் சால்வே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:இந்த வழக்கில், என்னை அமிகஸ் கியூரியாக நியமித்ததற்கு, வழக்கறிஞர்கள் சிலர் உள்ளர்த்தம் கற்பிக்கின்றனர். எனக்கு தலைமை நீதிபதியை, பள்ளிக் காலத்திலிருந்தே தெரியும் என்ற நிழலின் கீழ், இந்த முக்கியமான வழக்கு விசாரிக்கப்படுவதை, நான் விரும்பவில்லை. அதனால், அமிகஸ் கியூரியாக செயல்பட விரும்பவில்லை. அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

சால்வேயின் கோரிக்கையை ஏற்று, அமிகஸ் கியூரி பொறுப்பிலிருந்து அவரை விடுவித்த நீதிபதிகள் கூறியதாவது: ஹரீஷ் சால்வேயை அமிகஸ் கியூரியாக நியமித்தது, நீதிபதிகளின் கூட்டு முடிவு. இதை, வழக்கறிஞர்கள் சிலர் விமர்சித்துள்ளது வேதனையளிக்கிறது. உயர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும், கொரோனா மேலாண்மை தொடர்பான வழக்குகளின் விசாரணைக்கு, நாங்கள் தடை விதிக்கவில்லை.

நாங்கள் பிறப்பித்த உத்தரவை சரியாக படிக்காமல், வழக்கறிஞர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதன் பின், இந்த வழக்கு விசாரணையை, 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X