ஜோத்பூர்:நாடு முழுதும், ஆக்சிஜன் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில், ராஜஸ்தானில், புதுமை முயற்சியாக, 'ஆக்சிஜன் வங்கி'யை, சமூக சேவகர் ஒருவர் துவக்கியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதில், ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், ஆக்சிஜன் பற்றாக்குறையால், மருத்துவமனைகளும், நோயாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், நிர்மல் கெலாட் என்ற சமூக சேவகர், புதுமை முயற்சியாக ஆக்சிஜன் வங்கி துவக்கியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:
என் தாய், கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார். இதனால் தான், ஆக்சிஜன் வங்கியை துவக்கியுள்ளேன். இதற்காக, ஆக்சிஜனை சேகரிக்கும் சிறிய மிஷின்களை வாங்கியுள்ளேன். இந்த மிஷினின் விலை, 40 ஆயிரம் ரூபாய். இந்த மிஷின், வெளியில் உள்ள காற்றை சேகரித்து, அதிலிருந்து நைட்ரஜனை பிரித்து, ஒவ்வொரு நிமிடத்துக்கும், 5 லிட்டர் சுத்தமான ஆக்சிஜனை வழங்கும்.இந்த மிஷினில் குழாயை இணைத்து, வீட்டிலேயே, கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இதனால், மருத்துவமனை செலவும் குறையும். இந்த மிஷினை, தினமும். 100 ரூபாய் வாடகைக்கு வழங்க முடிவு
செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE