பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : விஷம் தடவாதீர் ஆசிரியரே!

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டத்தில், அரசு பழங்குடியின மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, விடுதி மற்றும் கல்வி உதவி தொகை, 7,300 ரூபாயை, 'ஆட்டையை' போட்ட, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டத்தில், அரசு பழங்குடியின மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, விடுதி மற்றும் கல்வி உதவி தொகை, 7,300 ரூபாயை, 'ஆட்டையை' போட்ட, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவியரிடம் தவறாக நடந்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் சிலர் கைதாவது ஒரு பக்கம் என்றால், மாணவருக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையில் கை வைப்பது, இன்னொரு பக்கம் அதிகரித்து வருகிறது.latest tamil newsஓராண்டுக்கு மேலாக, பள்ளி மூடியிருக்கும் போதும், ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் சம்பளத்தை குறைக்காமல் தமிழக அரசு வழங்கி வருகிறது. அவர்களும் வளமான வாழ்க்கை தான் வாழ்கின்றனர். பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ள மாணவ - மாணவியரே, அரசு பள்ளியில் அதிக அளவில் படித்து வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சொந்த பணத்தில் இருந்து, அந்த ஏழை மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்வது சிறப்பானதாகும். அதிகளவில் பெறும் மாதச் சம்பளத்தில் இருந்து, மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அரசு வழங்கும் பல்வேறு இலவச பொருட்கள், கல்வி உதவி தொகை, மானியம் ஆகியவற்றில், 'கை வைக்காமல்' இருக்கலாமே!


latest tamil newsஆசிரியர் பணி அறப்பணி. அதை சிறப்பான முறையில் செய்து, இந்த சமூகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக, ஆசிரியர்கள் திகழ வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒரு சில ஆசிரியர்கள் தான், சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கின்றனர். நெருக்கடியான இக்காலகட்டத்தில் ஆசிரியர்கள், தம் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ, உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, தடுக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில், 'கை வைத்து'ஆசிரியர்கள் கைது என்பது, பெரிய தலைகுனிவாக அமைகிறது. சமூகத்தை மாற்றும் ஆசிரியரின் சக்தி, கூர்மையாக இருக்க வேண்டும்; அந்த கூர்மையில், விஷம் தடவி இருக்கக் கூடாது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nirmal susai - sydney,ஆஸ்திரேலியா
25-ஏப்-202102:32:33 IST Report Abuse
Nirmal susai Blaming the entire teaching community is unaccep.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஏப்-202121:49:32 IST Report Abuse
A.George Alphonse ஆசிரியர் போஸ்ட் வாங்க கொடுத்த லஞ்ச பணத்தை அரசியல் வாதிகள் தேர்தலில் செலவழித்ததை எப்படி வெவ்வேறு ஊழல்கள் மூலம் திறுப்பி அள்ளுகிறார்களோ அதேபோல் ஆசிரியர்களும் இப்படி ஆட்டை போட ஆரம்பித்து விட்டார்கள் போலும். All are lootting the public money for their selfish end in all possible ways.So as these teachers also .
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
24-ஏப்-202120:02:25 IST Report Abuse
spr திருக்குறளோ திரு கலாமின் அறிவுரைகளோ எதுவாயினும் பலர் பாராட்ட, பேசுவதற்காகவே வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக அல்ல அவை முன்னேற நினைப்பவனுக்கொரு மூலதனம் எப்படி வேதம் ஓதுவது ஓடுவிப்பது மட்டுமே தனது கடமை என அந்தக் காலத்தில் எண்ணப்பட்டதோ அது போல கல்வி கற்பது கற்பிப்பது மட்டுமே தனது கடமையென்ற எண்ணமுள்ளவர்கள் இன்றில்லை வேறு துறையிலும் வேலை கிடைக்காதவர் பணம் கொடுத்து விளக்கு வாங்குவதே ஆசிரியத் தொழில் என்றாகிவிட்டது அப்படி ஆசிரியரான ஒரு உடற்பயிற்சி ஆசிரியரும் ஒரு தமிழாசிரியரும் அவரவர் அந்தரங்க ஒழுங்கீனங்களை பட்டியலிட்டுச் சொல்லி அடித்துக் கொண்டது இன்றும் என் நினைவிலிருக்கிறது அவர்கள் என்ன கற்றுக் கொடுக்க முடியும் தமிழ் சொல்லிக் கொடுப்பவன் அப்படியொரு கேவலமான பிறவியாக இருக்கக்கூடும் என்பது என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை சில சமயங்களில் ஆசிரியைகள் நல்லவகையில் பணியாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆளும்கட்சி அரசியல்வியாதிகள் அதிகாரிகளை 'சமாளிக்க வேண்டியுள்ளதால்' அவர்களும் விலை போகிறார்கள். அவர்களை மாணவர்களும் ஒரு பெண் என்று அவமரியாதை செய்கிறார்கள் அவர்களும் நமக்கு எதற்கு வீண் வம்பு என ஒதுங்கிப் போகிறார்கள் இது எல்லாவற்றுக்கும் ஒரே விடிவு கழகங்களை அடியோடு ஒழிப்பதுதான் சமயச் சார்பு இருந்தால் கூட பரவாயில்லை பாஜக ஆட்சிக்கு வருவதுதான் என்ற எண்ணம் உண்டாக்குமானால் அதில் தவறேதுமில்லை
Rate this:
ayyo paavam naan - chennai,இந்தியா
24-ஏப்-202121:37:01 IST Report Abuse
ayyo paavam naanஉங்கள் கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாக இருந்தாலும், சமய சார்பு இருந்தால் கூட என்ற வார்த்தையின் விளக்கம் எனக்கு வேறு விதமாக புரிகிறது. எல்லா மதங்களையும் ஏற்றுக்கொண்டு எந்த மாதமாவது ஒழுங்கீனங்களையும் அதது மீறல்களையம் ஆதரிக்கிறதா என்று ஆராய்ந்தால், ஒரு மதம் கூட அவ்வாறு சொல்லவில்லை. ஒவ்வொரு பிறவியம் (இந்த இடத்தில பிறந்த நாள் முதல் இறக்கும் வரை எவ்வளவுபேர் மனிதர்களாக மானுடர்களாக இருக்கிறோம் என்பது இன்னும் எனக்கு புரியவில்லை)தங்கள் பிறந்த வீட்டில் என்ன மதம் பின்பற்றப்படுகிறதோ அதை தங்கள் மதம் என்று கூறிக்கொள்கிறார்கள் அல்லது கூறப்படுகிறார்கள். ஒரு குற்றவாளியின் செயல் ஒரு மதத்தை குற்றம் சொல்ல காரணமாகக்கூடாது.திரு சுபர் அவர்களின் கருத்திற்கு கொஞ்சம் அருகில் இருந்து குற்றங்களுக்கு தண்டனை என்பதை நிச்சயமாகவும் விரைவாகவும் கொடுக்க கூடிய அரசு வர வேண்டும். அதற்கேற்றாற்போல நீதி முறைகளும் சட்டங்களும் இயற்றப்படவேண்டும். அது தற்போதய சூழ்நிலையில் பாரதிய ஜனதா அரசு மட்டும் தான் செய்யும் என்ற எண்ணம் இங்கு பலருக்கு உண்டு. அதை செய்ய திமுகவும், காங்கிரசும் வந்தாலும் எனக்கு ஆட்சேபனையில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X