புதுடில்லி : பிரிட்டனின் முதலாவதும், மிகப் பிரபலமானதும், வரலாற்று பின்னணியும் கொண்ட, ஆடம்பர தங்கும் விடுதியான, ஸ்டோக் பார்க்கை கிட்டத்தட்ட, 600 கோடி ரூபாய்க்கு, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது.

பக்கிங்ஹாம்ஷைரில் கிட்டத்தட்ட, 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள, 'ரிசார்ட்' ஆகும் இந்த ஸ்டோக் பார்க். கண்ணைக் கவரும் தோட்டங்கள், கோல்ப் மைதானம், 49 ஆடம்பர அறைகள், பூங்கா, உணவகம் என, பல வசதிகள் கொண்டதாகும், இந்த தங்கும் விடுதி. அரச குடும்பத்துக்கு சொந்தமான, இன்டர்நேஷனல் குரூப் நிறுவனத்திடமிருந்து இந்த சொத்தை, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கி உள்ளது.

அண்மையில் இந்த சொத்தை வாங்குவது குறித்த பேரங்கள் நடைபெற்று வந்த நிலையில், 57 மில்லியன் பவுண்டுக்கு வாங்கப்பட்டு உள்ளது.கடந்த, 2016ல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த விடுதியை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாகவும்; ஆனால், 'டீல்' முடியவில்லை என்றும் சொல்லப் படுகிறது. இங்கு பிரபலமான, ஜேம்ஸ் பாண்ட் படங்கள்உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE