பொது செய்தி

இந்தியா

ஜெர்மனியில் இருந்து 23 ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வருகிறது!

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.நாடு முழுதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்க, முப்படைகளுக்கு அவசரகால
Defense Ministry, airlift, mobile oxygen generating plants, Germany

புதுடில்லி: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இருந்து, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுதும், பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை வாங்க, முப்படைகளுக்கு அவசரகால நிதி அதிகாரத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் வழங்கினார். இதையடுத்து, ஜெர்மனியில் இருந்து, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை விமானம் வாயிலாக எடுத்து வர, ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


latest tamil news


இது குறித்து ராணுவ அமைச்சக முதன்மை செய்தி தொடர்பாளர் பரத் பூஷண், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெர்மனியில் இருந்து விமானம் வாயிலாக, 23 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் எடுத்து வரப்பட உள்ளன. இவை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஒவ்வொரு இயந்திரமும், ஒரு மணி நேரத்தில், 2,400 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உடையது.

இவை, கொரோனா சிகிச்சை அளிக்கப்படும், ஆயுதப்படை மருத்துவ சேவைகள் மைய மருத்துவமனைகளில் நிறுவப்படும்.இந்த இயந்திரங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சுலபமாக எடுத்துச் செல்ல முடியும். வெளிநாடுகளில் இருந்து, மேலும் பல ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை வாங்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
24-ஏப்-202121:13:40 IST Report Abuse
Rasheel இந்தியாவின் பல நகரங்களில் நடக்கும் உண்மை இதுதான். முகத்தை மூட வேண்டிய மாஸ்க் காதில் ஸ்டாண்டாக இருக்கிறது. மூட வேண்டிய மூக்கு மற்றும் வாய் திரந்து இருக்கிறது. அப்புறம் எப்படி கொரோன வராது. . ஆயிரம் டாக்டர் கழுதையை கத்தினாலும் வார விடுமுறை நாட்களில் சிக்கன், மீன் வாங்க காசி மேடு போன்ற பகுதிகளில் பல ஆயிரம் பேர் கூட்டம். இது தவிர அரசியல் வியாதியின் 500 ஆசைப்பட்டு உயிரை விடும் தேர்தல் பிரச்சார கூட்டம். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் கொரோனவை முட்டை வைத்து கொஞ்சு பொரிக்கும் டெல்லி பஞ்சாபி, ஹரியானா கூட்டம். மத வித்தியாசம் இன்றி கூட்டம் போட்டு வழிபாடு என்ற பெயரில் நடக்கும் சாவை முறை வைத்து அழைக்கும் கூட்டம். கொரோன குதித்து குதித்து மனிதனை புதைக்கிறான். தப்பு செய்த மக்கள் அடுத்தவனை நோகிறான். வெட்க கேடு.
Rate this:
Cancel
Senthil Kumar - Kano,நைஜீரியா
24-ஏப்-202118:31:08 IST Report Abuse
Senthil Kumar கட்சிகாரன் காசு கொடுத்து கூப்பிட்டா மக்களுக்கு எங்க போச்சு அறிவு. அதற்கான பலன் தான் இப்போ நாம் அனுபவிக்கிறது.
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
24-ஏப்-202118:23:47 IST Report Abuse
krish அசாதாரணமான அவசர நிலைமையை புரிந்து, தூத்துக்குடி வாழ் மக்கள், ஸ்டெரிலைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தியை மட்டும் பிரத்யேகமாக தொடங்க ஆதரவு அளிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X