பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி தயாரிக்க மூலப்பொருள் தராத அமெரிக்கா : டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருளை தர அமெரிக்கா மறுத்து வருகிறது. இதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பு விகிதமும் கூடிக் கொண்டே
Biden, Coronarawmaterial, Indiacovid19,

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருளை தர அமெரிக்கா மறுத்து வருகிறது. இதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விஷயம் டிரெண்ட் ஆனது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இறப்பு விகிதமும் கூடிக் கொண்டே போகிறது. மேலும் நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. இந்நிலையில் தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஏற்றுமதியை அனுமதிக்கும்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தது.


latest tamil newsஇது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது : அமெரிக்கா தான் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். அதனால் தடுப்பூசி தேவையை கருதி போர்க்கால ராணுவ தயாரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி உள்நாட்டு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்திற்கான மூலப்பொருட்களை முதலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் வழங்க முடியும்; ஏற்றுமதி செய்ய முடியாது. உள்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காத்து அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் இரு முக்கிய கடமைகள் அமெரிக்க அரசுக்கு உள்ளன என்றார்.

ஜூலை 4ம் தேதிக்குள் அமெரிக்கா தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்த முடிவு செய்துள்ளது. அதன் பிறகே தடுப்பூசி மருந்தின் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தும் என தெரிகிறது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அமெரிக்க மக்களின் தேவைக்கு அதிகமாகவே கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவ மறுப்பதை சுட்டிக்காட்டி #Biden என்ற ஹேஷ்டாக்கில் பலரும் அமெரிக்க அதிபர் பிடனை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் #Biden என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள் இங்கே...


latest tamil news* ஆரம்பம் முதலே பிடனும், கமலா ஹாரிஸூம் நமக்கு கெட்ட செய்திகளை தான் தருகின்றனர். இந்தியர்களுடன் எப்போதும் அமெரிக்கா இணக்கமாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி நம்மை நம்ப வைத்துள்ளனர். உண்மையில் இந்தியர்களின் நலனின் ஒருபோதும் அமெரிக்கா அக்கறை கொண்டது இல்லை.
* இவர்கள் இப்படி கூறியதில்லை ஆச்சர்யப்பட தேவையில்லை. அமெரிக்காவின் முந்தைய ஜனநாயக அரசை போலவே இந்த அரசாங்கமும் இந்தியாவின் நண்பன் போன்று பாசாங்கு செய்கிறது.
* கொரோனாவுக்கு முதலில் நன்றி. இப்போது தான் ஒவ்வொரு நாடுகளின் உண்மை முகம் வெளிப்பட தொடங்கி உள்ளது.
* அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தபடாமலே அங்குள்ள கிடங்குகளில் கிடக்கிறது. இந்தியா ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் போது அமெரிக்கா கைவிரித்துவிட்டது. பரவாயில்லை, எங்களின் நம்பிக்கை வீண்போகாது. நாங்கள் இதிலிருந்து மீண்டு, விரைவில் உலகுக்கான மருந்தாக நாங்கள் இருப்போம்.
* கடந்தாண்டு இந்தியாவிடம் அமெரிக்கா ஹைட்ராக்சி குளோரோகுயினை கேட்டபோது முதலில் மறுத்தார் பிரதமர் மோடி. பின்பு அவரே அனுப்பி வைத்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்போது இந்தியாவுக்கு எதிராக ஜோ பிடன் இருக்கிறார். ஆனால் மோடியை வெறுப்பவர்கள் இங்கு பிடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை கொண்டாடினார்கள்.
*ஒவ்வொரு முறையும் இந்தியாவுக்கான வளங்கள் , தொழில்நுட்பங்கள் மறுக்கப்படுகின்றன. பிடன் நிர்வாகமும் அதை இப்போது செய்துள்ளது.
* அமெரிக்காவில் தேவைக்கும் அதிகமான தடுப்பூசிகள் உள்ளன. தடுப்பூசிக்கான மூலப்பொருட்களின் பெரும்பகுதி அமெரிக்காவிடம் உள்ளது. இந்தியாவில் நேற்று 3,56,000 பேருக்கு நோய்த்தொற்று இருந்தது. பலர் இறக்கின்றனர். தடுப்பூசி தயாரிக்க தயவு செய்து மூலப்பொருட்களை அனுப்புங்கள்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் AND NOW YOU'VE ELECTED LEADERS WHO ARE AUTHORITARIAN CENTRALISERS, WHO HAVE MUCH LESS ABILITY TO ACTUALLY DO THE GIVE-AND-TAKE THAT DIPLOMACY REQUIRES. AND SO THE CHANCES OF NEGOTIATING YOUR WAY OUT OF CRISES BECOME LESS. LOOK AT THE INABILITY OF THE WORLD TO COOPERATE, SAY ON VACCINES. IT TELLS YOU ABOUT THE CAPACITY OF THE GLOBAL POLITICAL TEM TODAY, AND THE RISKS THAT HYPER NATIONALISM BRINGS. - SHIVSHANKAR MENON, FORMER NATIONAL SECURITY ADVISER.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஆரம்பம் முதலே பிடனும், கமலா ஹாரிஸூம் நமக்கு கெட்ட செய்திகளை தான் தருகின்றனர். மன்னார்குடி காரர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்
Rate this:
Cancel
25-ஏப்-202104:56:53 IST Report Abuse
ஆப்பு ஆத்மநிர்பரா திட்டம் காத்தோட போயாச்சு... அமெரிக்காவிடம் மூலப் பொருள் கேக்காம தடுப்பூசி கேட்டுப்பாருங்க. ஒரு 50000 கோடிக்கு ஆர்டர் குடுங்க. எல்லாம் துட்டு மச்சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X