பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் தேவைக்கு 104 அழையுங்கள்: கால் சென்டர் அமைத்தது தமிழக அரசு

Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. அதற்கான உதவி எண்ணையும் அறிவித்து உள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும்

சென்னை: ஆக்சிஜன் விநியோகம் தொடர்பான சிக்கல்களை தீர்க்க 24 மணி நேரமும் செயல்படும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. அதற்கான உதவி எண்ணையும் அறிவித்து உள்ளது.latest tamil newsஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கொரோனா சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மருத்துவ ஆக்சிஜன் ஏற்றி செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்ளும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எணணில் உதவிக்கு அழைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
24-ஏப்-202123:32:33 IST Report Abuse
Raj CM & Contractors excuse.This is life matters of common people
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
24-ஏப்-202120:29:02 IST Report Abuse
kijan வரும் செய்திகளை பார்க்கும்போது தமிழகத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருக்கிறது .... அலை ஒன்று மற்றும் இரண்டில் தேவையான அளவு மருத்துவமனைகள் படுக்கைகள் உள்ளன ... அரசு மற்றும் ஆகச்சிறந்த தன்னார்வலர்கள் உணவு, தேவைப்படும் உதவிகள் செய்ய தயாராக உள்ளனர்.... ஆனால் கர்நாடக முதல்வர் நிலைமை கை மீறி போய்விட்டது என்கிறார் ....
Rate this:
Cancel
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
24-ஏப்-202118:03:22 IST Report Abuse
Amar Akbar Antony சாலைகளில் இன்றைய சூழ்நிலைக்கு மிக்க அவசியமான ஒன்று: ஆம்புலன்ஸ் செல்வதற்காக சாலையின் ஒரு பகுதியை மாற்று நிற அடையாளம் கொடுத்தால் முன்னால் உள்ள வண்டிகள் அந்த பகுதியை தவிர்க்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X