பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் மீதான வரியை ரத்து செய்தது மத்திய அரசு

Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் மீதான சுங்க மற்றும் சுகாதார வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான சுங்க வரியையும் ரத்து செய்ய
Govt, customs duty, health cess, import, oxygen, equipment,

புதுடில்லி: இந்தியாவில், கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் மீதான சுங்க மற்றும் சுகாதார வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர் மட்ட குழு கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மீதான சுங்க வரியையும் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ள மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.


latest tamil news


ஆக்சிஜன் மற்றும் அது தொடர்புடைய உபகரணங்கள், கொரோனா தடுப்பூசி ஆகியவை இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றை தாமதபடுத்தாமல், உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

வீட்டிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் மற்றும் அது சார்ந்த உபகரணங்கள் கிடைப்பது அவசியம் என வலியுறுத்திய மோடி, இதனை நோக்கமாக வைத்து அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் பணியாற்ற வேண்டும் என கேட்டு கொண்டார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRAKASH.P - chennai,இந்தியா
24-ஏப்-202123:07:46 IST Report Abuse
PRAKASH.P If collecting tax only government response.. then we no need governments.. we need more tax collector s
Rate this:
Cancel
கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா எரிவதற்கு Oxygenனே தேவையில்லை இந்தியாவில்
Rate this:
Cancel
24-ஏப்-202122:43:01 IST Report Abuse
ஆப்பு இறக்குமதி வரியும் ரத்தாகியிருக்கணுமே... சிங்கப்பூரில் இருந்து டன் டன்னா சிலிண்டர் வந்து இறங்குதே.. அதானி, குந்தானி யாராவது அங்கேருந்து இறக்குமதி செஞ்சு மக்களைக் காப்பாத்தி பி.எம். கேர் ஃபண்டுக்கு 500 கோடி குடுப்பாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X