பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மரத்வாடா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று(ஏப்.,24)மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர்,
தமிழகம், மழை, சென்னை வானிலை,

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மரத்வாடா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று(ஏப்.,24)மேற்கு தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை மற்றும் நாளை மறுநாள்(ஏப்., 25,26) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான வானிலையே நிலவும்.

ஏப்.,27 மற்றும் 28 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.


latest tamil news


கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையால் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உணரப்படும்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச நெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில், ஒட்டன்சத்திரம்(திண்டுக்கல்), பென்னாகரம்(தர்மபுரி), தர்மபுரி பிடிஓ பகுதிககளில் தலா 6 செ.மீ., மழையம், ராசிபுரம், வேடசந்தூரில் தலா 5 செ.மீ., மழையும் நடுவட்டம், எருமைப்பட்டியில் தலா 4 ச.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
24-ஏப்-202118:07:17 IST Report Abuse
Ramesh Sargam மழை பெய்தாதான் நம்ம ஜனங்க அனாவசியமா வெளியில சுத்தமாட்டாங்க. கொரானா ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X