‛மாடலிங்'கில் நாங்களும் கலக்குவோம்

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'அதென்ன மும்பை, சென்னை, பெங்களூரூ பெண்கள் மட்டும் தான் மாடலிங்கில் கலக்குவார்களா மதுரை பெண்கள் நாங்களும் கலக்குவோம்' என தங்கள் அழகாலும், அறிவாலும் திறமையாலும் கலக்கும் மதுரை மாடல் அகிலா, பேஷன் டிசைனர் ஆரிபா பேசுகிறார்கள்...'பேஷன் மாடல்' ஆரிபா திருப்பூரில் பி.டெக் பேஷன் டெக்னாலாஜி முடித்த பின் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். டெக்ஸ்டைல் நிறுவனத்தில்
‛மாடலிங்'கில் நாங்களும்  கலக்குவோம்

'அதென்ன மும்பை, சென்னை, பெங்களூரூ பெண்கள் மட்டும் தான் மாடலிங்கில் கலக்குவார்களா மதுரை பெண்கள் நாங்களும் கலக்குவோம்' என தங்கள் அழகாலும், அறிவாலும் திறமையாலும் கலக்கும் மதுரை மாடல் அகிலா, பேஷன் டிசைனர் ஆரிபா பேசுகிறார்கள்...


'பேஷன் மாடல்' ஆரிபா


திருப்பூரில் பி.டெக் பேஷன் டெக்னாலாஜி முடித்த பின் மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறேன். பிரபலமான 'இ காமர்ஸ்' பிராண்ட், பியூட்டி பார்லர்களுக்கு விளம்பர போட்டோ ஷூட் பண்றேன். சமீபத்தில் மதுரை 'கிளாம்சோ' பிரைடல் பேஷன் ஷோவில் பரிசு வாங்கியிருக்கேன்.பேஷன் டிசைனிங் துறையில் இருப்பதால் மாடலிங் சேர்த்து பண்ணி னாலும் டிசைனராக சாதிக்க விரும்புறேன். பவள பாறை 'தீம்'ல ஒரு டிரஸ் டிசைன் பண்ணி என் திறமையை வெளிப்படுத்தினேன். மெல்லிய கலர்களில் டிரண்டிங் ஆடைகளை டிசைன் செய்வது என் ஸ்டைல். மாடலிங், பேஷன் போட்டிகளில் நிறைய விருது களும் வாங்கியிருக்கேன். மதுரை சில ஆண்டுகளில் மும்பை, சென்னை அளவு மாடலிங், பேஷன் துறைகளில் முன்னேறும். நானும் பெரிய டிசைனராக பேசப்படுவேன் என நம்பிக்கை இருக்கு. உற்சாகம் தரும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி.


'டஸ்கி' அழகி அகிலா


இன்ஜினியரிங் படிக்கிறேன்... இன்ஸ்டாகிராமில் மாடல் போட்டோ ஷூட் எடுத்து அப்லோட் பண்ணுவேன். அதை பார்த்து சிலர் மாடலிங் பண்ண கூப்பிட்டாங்க. அப்புறம் 'செடி', 'சர்கிள்' குறும்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தேன். 'சிவா மனசில சக்தி' படத்தின் 'ஒரு பார்வையிலே' பாட்டுக்கு 'கவர் சாங்' பண்ணியிருக்கேன். 2020 ஐபா 'மிஸ் மதுரை'யில் 'டாப் சிக்ஸ்' வந்தேன்.மாடலிங் வந்த பின் 'டஸ்கி ஸ்கின்'ல உங்க போட்டோஸ் அழகா இருக்குன்னு பலர் பாராட்டுறாங்க. அதுவே பெரிய அங்கீகாரமா நினைக்கிறேன். சினிமா வாய்ப்புகளும் வருது... அம்மா மஞ்சுளா தரும் உற்சாகத்தால் தான் இந்த அளவு வந்திருக்கேன். ஒரு மதுரைக்கார பொண்ணா மாடலிங்கில் சாதிப்பது பெரிய விஷயம். 'டிவி'யில் தொகுப்பாளராவதே லட்சியம்.-ஸ்ரீனி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
30-ஏப்-202108:57:14 IST Report Abuse
Girija வீட்டில் பூச்சிகளாக சிக்கிக்கொள்ளாதீர்கள், தமிழ் கலாச்சாரம் இதுவல்ல, மாடலிங் என்ற பெயரில் உங்கள் அழகை கடை விரிக்காதீர்கள். பின்னாளில் வாழ்க்கைத்துணை கிடைப்பது கடினமாகிவிடும், வாழ்க்கை போராட்டமாகிவிடும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X