பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுதும் துவங்கியது முழு ஊரடங்கு

Updated : ஏப் 24, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகம் முழுதும் இன்று முழு ஊரடங்கு துவங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஏப்.20 தேதி முதல் இரவு 10:00 மணியிலிருந்து காலை 4:00 மணி
 தமிழகம் ,துவங்கியது முழு ஊரடங்கு

சென்னை : தமிழகம் முழுதும் இன்று முழு ஊரடங்கு துவங்கியது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 30ம் தேதி நள்ளிரவு வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஏப்.20 தேதி முதல் இரவு 10:00 மணியிலிருந்து காலை 4:00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பஸ் போக்குவரத்து ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமலானது. இன்று துவங்கி திங்கட்கிழமை அதிகாலை வரை முழு ஊரடங்கு நீடிக்கும்.


latest tamil news



முழு ஊரடங்கை அடுத்து சென்னை அண்ணா சாலை, மெரினா, காமராஜர் சாலை ஆகிய சாலைகளில் போலீசார் தடுப்பு அரண்களை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதே போன்று தமிழகத்தில் முக்கிய நகரங்களிலும் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
25-ஏப்-202112:41:38 IST Report Abuse
சோணகிரி இனிமேல் இதே கண்ணாமூச்சி விளையாட்டுதான்...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-ஏப்-202111:58:29 IST Report Abuse
S.Baliah Seer வரும் ஞாயிறு துவங்க இருக்கும் ஒட்டு எண்ணிக்கையின்போது நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த ஏற்பாடு இதனால் எந்த உபயோகமும் இல்லை.காசிமேட்டில் மீன் வாங்க கூட்டம் சேர்ந்தால் காயலான் கடையை ஏன் மூட வேண்டும்? முழு ஊரடங்கு,முக்கால் ஊரடங்கை ஊற்றி மூடுங்கள்.
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
25-ஏப்-202109:53:54 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தும்பை விட்டு வாலை பிடிப்பதில் கெட்டிக்காரர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X