கொரோனா தடுப்பில் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்

Updated : ஏப் 26, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை:'மே, 2க்கு பின், இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில், தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே, காபந்து சர்க்கார் உள்ள இந்த ஒரு வாரத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:முதல் கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்காக நடவடிக்கைகள், அப்போது
கொரோனா, தடுப்பு,அதிகாரிகள், தீவிரம்,

சென்னை:'மே, 2க்கு பின், இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலையில், தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே, காபந்து சர்க்கார் உள்ள இந்த ஒரு வாரத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:முதல் கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்காக நடவடிக்கைகள், அப்போது கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் வைத்து, தொலைநோக்கு திட்டம் தயாரிக்க தவறியதால், இரண்டாம் அலை தாக்குதல் தீவிரமாகி, தமிழகம் மோசமான பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வலுவாக இருக்கும் சுகாதார உள்கட்டமைப்பு, நமக்கு வரப்பிரசாதம் என்றாலும், அதற்கு ஏற்ற திட்டமிடல் இருந்தால் மட்டுமே, மக்களை கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்.ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடப்பதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, புதிய அரசு அமைவதற்கும், தற்போது அதிகாரிகள் செயல்பாட்டிற்கும் இடையே, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், எவ்வித தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது.

மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம், கொரோனா சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகளில், தலைமை செயலர், செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், தீவிரமாக ஈடுபட வேண்டும்.போர்க்கால வேகத்தில் பரிசோதனைகள் செய்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானோரை கண்டுபிடித்து, சிகிச்சை அளித்து, மற்றவர்களுக்கு நோய் பரவல் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

மே, 2க்கு பின், இன்னொருஊரடங்கை தாங்கும் நிலையில், தமிழக மக்களும், அவர்களின் வாழ்வாதாரமும் இல்லை. எனவே, 'காபந்து சர்க்கார்' உள்ள இந்த ஒரு வாரத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, அதிகாரிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
25-ஏப்-202122:50:45 IST Report Abuse
sankaseshan நீ முட்டுக்கொடுக்கிற தீயமுக காரனும் ஊழல்கும்பல் தான் அதை ஏன் சொல்லமாடீங்கிற சீனிவா சா சம்திங் வாங்கியிருக்கியா ?
Rate this:
Cancel
Balasubramanyan - Chennai,இந்தியா
25-ஏப்-202121:01:07 IST Report Abuse
Balasubramanyan Stalin must ask his MPs and other leaders to engage vigorously and serve the people . Already corona spread started by you politicians like Gramasabai,onrinivon Vaa. You and your son must be example to spread the importance of mask,social distance and for vaccine. Now you realised it is not modis vaccine. It is for your safety. Ask your partnersVaiko,communist and VCK to work for the welfare of people instead finding fault. Why you are silent on sterile request for production of oxygen for medical purpose. Why you are all blocking the way.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
25-ஏப்-202120:45:36 IST Report Abuse
bal வந்துட்டாராய்யா நாட்டின் சர்வாதிகாரி...சுகவாசி..வெட்கம் கெட்டவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X