சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

ஆபத்தான போர்வையாளர்கள் இவர்கள்!

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 24, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
நம்அண்டை நாடான நேபாளம், பொது உடைமைக்காரர்களின் பிடியில் சிக்கிய பிறகு, உலகின் ஒரே ஹிந்து நாடு என்ற தனித்தன்மையை இழந்து விட்டது. உலகில் இன்று, ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே நாடு, இந்தியா மட்டுமே.இந்தத் தகுதியையாவது, இந்தியாவில் நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச விழிப்புணர்வும், ஆர்வமும், துடிப்பும், ஹிந்துக்களுக்கு இருக்க
 ஆபத்தான போர்வையாளர்கள் இவர்கள்!

நம்அண்டை நாடான நேபாளம், பொது உடைமைக்காரர்களின் பிடியில் சிக்கிய பிறகு, உலகின் ஒரே ஹிந்து நாடு என்ற தனித்தன்மையை இழந்து விட்டது. உலகில் இன்று, ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே நாடு, இந்தியா மட்டுமே.


இந்தத் தகுதியையாவது, இந்தியாவில் நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச விழிப்புணர்வும், ஆர்வமும், துடிப்பும், ஹிந்துக்களுக்கு இருக்க வேண்டும்.தமிழகத்தில் ஹிந்துக்களிடையே, பிரிவினை எண்ணங்கள், குழப்பங்கள் மற்றும் சந்தேகங்களை விதைத்து, அவர்களைப் பிரித்துத் தாக்கும் அல்லது பலவீனப்படுத்தும் அயோக்கியத்தனத்தை, பல போர்வையாளர்கள் செய்கின்றனர்; இதற்காக அவர்கள், பல போர்வைகளில் ஒளிந்து கொண்டுள்ளனர்.

இவர்களின் உள்நோக்கம், தங்களுக்கு சாதகமாக ஓட்டு வங்கி அரசியலை பலப்படுத்துவதும், பிரிவினை எண்ணங்களால் குழப்பம் அடையும் ஹிந்துக்களை மத மாற்றம் செய்வதும் ஆகும்.இந்த பேராபத்தை உணர்ந்து கொள்ளும் அறிவும், விழிப்புணர்வும், ஹிந்துக்களிடையே, முக்கியமாக ஹிந்து இளைஞர்களிடையே பெருகி வருவதால், தங்கள் வியூகங்களை அந்த போர்வையாளர்கள் அவ்வப்போது மாற்றி வருகின்றனர்.


ஹிந்து மதத்திற்கு எதிராக சதி செய்யப் பயன்படுத்தும் முக்கிய போர்வைகளாக, பகுத்தறிவுப் போர்வை, மதச்சார்பின்மைப் போர்வை, சமூக நீதிப் போர்வை, தமிழ் பற்றுப் போர்வை, தமிழ் தேசியப் போர்வை, திராவிடப் போர்வை போன்றவற்றை பின்பற்றுகின்றனர். இப்பிரிவினை வாதிகள் நஞ்சாய் விதைத்த பிரிவினை எண்ணங்கள், ஹிந்துக்களிடையே ஆழமாக வேரூன்றியதால், 'நாம் அனைவரும் ஹிந்துக்கள்' என்ற ஒற்றுமை உணர்வும், சொரணையும் இன்றி, ஹிந்துக்கள் பலர், பரிதாபமாய் இன்று சிதறிக் கிடக்கின்றனர்.


பகுத்தறிவுப் போர்வைஒவ்வொரு கோவிலுக்கும்,அந்தக் கோவிலின் புராணம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில், சில தனித்தன்மையான வழிபாட்டு முறைகள் உள்ளன. அதை ஏற்காமல், 'சபரிமலை கோவிலில் ஏன் பெண்களை அனுமதிக்கவில்லை?' என்று பகுத்தறிவுப் போர்வையாளர் கேட்கிறார்.இவருக்கு, அந்தக் கோவில் புராணம் பற்றிய அடிப்படை அறிவும் கிடையாது; அந்த அய்யப்ப சுவாமியிடம் கடுகளவு பக்தியும் கிடையாது. பிறகு எதற்கு இவருக்கு, அய்யப்பன் மீது கவலை?

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலிலும், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலிலும், பொங்கல் வைக்கும் உரிமை, பெண்களுக்கு மட்டுமே உண்டு. அதுபோல, மேல்மருவத்துார் ஆதி பராசக்தி கோவிலிலும் பெண்களுக்கே வழிபாட்டில் முன்னுரிமை கொடுக்கும் வழக்கம் இருப்பது, இந்த அறிவிலிகளுக்குத் தெரியாது.

இன்னொரு பகுத்தறிவாளி, 'ஊரில் ஏழைகள் நிறைய பேர் இருக்கும்போது, சுவாமிக்கு ஏன் இத்தனை விலையுயர்ந்த ஆபரணங்கள், பட்டாடைகள்?' என்று கேட்கிறார். நமக்கு மிகவும் பிரியமானவர்களை, மரியாதைக்கு உரியவர்களை, நாம் அழகாக, மிடுக்காக, அலங்காரத்தில் பார்த்து ரசிப்பது போல, நம் தெய்வங்களை அலங்கரித்து ரசிக்கிறோம். இது, நமக்கே உரித்தான இறை வழிபாட்டு முறை. இதை அவர்களுக்கு புரிய வைக்கத் தேவையில்லை.மதச்சார்பின்மைப் போர்வைஅரசு பள்ளி விழாவில், இறை வணக்கத்தில், நம் மண் போற்றும் கல்வித் தெய்வமாகிய கலைவாணியை போற்றிப் பாடினால், மதச்சார்பின்மை போர்வையாளர், 'இது, மதச்சார்பின்மைக்கு எதிரானது' என கோஷம் எழுப்புகிறார்.அதே நேரத்தில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், அவர்களது பாடத் திட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கு, சிறுபான்மை மதங்களின் நுால்களையும், மத வழக்கங்களையும் கற்றுக் கொடுக்கின்றனர்.
ஆனால் அரசு பள்ளிகளில், 'மதச்சார்பின்மை' என்ற பெயரில், பாடத் திட்டங்களில் இருந்து, ஹிந்து மத நுால்கள், கருத்துக்கள், பாடல்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டன.
'ஒரு குறிப்பிட்ட நிலத்தில் கோவில் கட்டுவதற்கு பதிலாக, எல்லாருக்கும் பயன் தரும் பள்ளி, மருத்துவ விடுதி கட்டலாமே' என்று மேடையிலும், எழுத்திலும், திரைப்படத்திலும் கேட்டு, மதச்சார்பின்மைப் போர்வையாளர், 'புரட்சி' என்ற பெயரில் விதண்டாவாதம் செய்கிறார்.
இந்த வாய் பேச்சு வீரர்கள், தப்பித் தவறிக்கூட மற்ற மத வழிபாட்டுத் தலங்களைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். இந்த போர்வையாளர்கள், திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் உருவத்தை அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றியது போல, திருக்குறளுக்கும் தவறான பதவுரை தருகின்றனர். அதில், இறைவனை போற்றும் பகுதிகள் மாற்றப்படுகின்றன.


சமூக நீதிப் போர்வை
மஹாபாரதத்தை ஆழ்ந்து படித்து, சரியாகப் புரிந்து கொள்ளாமல், 'ஏகலைவனுக்கு அநீதி இழைத்த ஹிந்து மதம்' என்று, சமூக நீதிப் போர்வையாளர் பொங்குகிறார்.அக்காலத்தில், ஷத்திரியர்களைத் தவிர மற்றவர்கள், போர்க்கலைகளை கற்றுக் கொள்ளக்கூடாது என்பது சட்டம். துரோணர், எந்த அரசிற்கு கீழே ஆசிரியராகப் பணி புரிந்தாரோ, அந்த அரச குலத்தைக் காக்கவும், அவர்கள் நம்பிக்கைக்கு பொறுப்பாளராக இருக்கவும், தனக்குத் தெரியாமல் வில் வித்தை கற்ற ஏகலைவனுக்கு, அன்றைய வழக்கப்படி தண்டனை கொடுக்கும் துர்பாக்கியத் திற்கு தள்ளப்பட்டார்.இந்த உண்மையை இருட்டடிப்பு செய்து, ஜாதி பிரச்னை ஆக்கி, ஹிந்து மதத்திற்கு எதிராக விஷமப் பிரசாரம் செய்கின்றனர்.


தமிழ் பற்றுப் போர்வைஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழர் காலத்திலேயே, கோவில்களில் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வழிபாடு நடத்தப்பட்டது; இன்னமும் பல கோவில்களில் இரு மொழி வழிபாடு தொடர்கிறது.போர்வையாளர்கள் இதை அறியாமல், 'தஞ்சை பெரிய கோவிலில் சமஸ்கிருதம் எதற்கு' என்று, பாரதத்தின் தொன்மை வாய்ந்த சகோதர மொழிகளாம் தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும், சிண்டு முடித்து வேடிக்கை பார்க்கின்றனர்.


தமிழ் தேசியப் போர்வைமுதல், இடை, கடைச் சங்க காலங்களில் இருந்தே பண்டைத் தமிழர், 'ஹிந்து மத கருத்துகளை ஏற்று, ஆன்மிகம் சார்ந்து வாழ்ந்தனர்' என்ற உண்மையையும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சேக்கிழார், கம்பர் போன்றோர் வளர்த்த பக்தித் தமிழ் இலக்கியங்களையும் இருட்டடிப்பு செய்தனர், இந்த போர்வையாளர்கள்.

'தனி இனமான தமிழர் மீது, வந்தேறிகள், ஹிந்து மத நம்பிக்கைகளை பிற்காலத்தில் திணித்தனர்' என்று, தமிழ் தேசியப் போர்வையாளர் கூசாமல் பொய்யுரைக்கிறார்.

தமிழும், ஹிந்து மதமும் பிரிவுறாமல் பின்னிப் பிணைந்து இருந்து வந்ததை, கணக்கற்ற தமிழ் இலக்கியங்களும், ஆன்மிகப் பெரியோர்களின் வாழ்க்கையும் பறைசாற்றி, உறுதியாகத் தெரிவிக்கின்றன. பாரதத்தையும், பாரதம் முழுவதும் பரவியிருந்த ஹிந்து மதத்தையும் அன்னியப்படுத்தி, 'தமிழர் தனி இனம்' என்று சித்தரித்து, பிரிவினைவாதத்தால் சுய லாபம் தேடும் வேடதாரிகள் தான், இந்த தமிழ் தேசியப் போர்வையாளர்கள்.திராவிடப் போர்வைஉண்மையை இருட்டடிப்பு செய்து, 'ராமாயணம் ஆரியத் திணிப்பு' என்றும், 'திராவிடராகிய தமிழர், ஆரியப் பண்டிகையாம் தீபாவளியை கொண்டாடக் கூடாது' என்றும், திராவிடப் போர்வையாளர்கள், பொய் என்னும் விஷத்தை கக்குகின்றனர்.ஹிந்து கலாசாரத்தையும், ஹிந்து பண்டிகைகளையும் குழப்புவது இவர்களுக்கு கைவந்த கலை. உதாரணமாக, நல்ல விளைச்சலுக்காக சூரியக் கடவுளுக்கு பொங்கலிட்டு, நன்றியுடன் வழிபடும் ஹிந்து பண்டிகை பொங்கல்.ஆனால், திராவிடப் போர்வை, தமிழ் பற்றுப் போர்வை, மதச்சார்பின்மை போர்வையில் ஒளிந்து கொண்டு, நம் பொங்கல் விழாவிலிருந்து ஆன்மிகத்தை வடிகட்டிப் பிரித்து, அதற்கு, 'தமிழர் திருநாள்' என்று பெயரிட்டு, 'அதற்கும், ஹிந்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை' என்ற கருத்தைப் பரப்பி, பித்தலாட்டம் செய்வதில் இவர்கள் கில்லாடிகள்.


துண்டாடும் போர்வையாளர்கள்ஹிந்துக்களை பிரிக்க,இந்த போர்வையாளர்கள் எப்படி, பிரிவினை எண்ணங்களை விதைக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம்...வடக்கு, தெற்கு என்ற சிந்தனையை விதைத்து, 'இவன் நம் உரிமைகளை பறிக்க வந்த வடக்கத்திக்காரன்' என்று, நம்மில் ஓரிருவரை பிரித்து விடுவர். பின்பு, 'இவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு போட்டியாக வந்த, தமிழர் அல்லாதோர்' என, ஓரிரு தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை பிரித்து விடுவர். அடுத்து, ஆரியன் -- திராவிடன் என்ற பிரிவினை எண்ணங்களை விதைத்து, ஜாதி பற்றி பேசி, சிலரை பிரித்து விடுவர். புராணங்கள் மீது நம்பிக்கையுடன் பேசுவோர் சிலரை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத அறிவிலிகள் என்று கிண்டல் செய்து, பிரித்து விடுவர்.

எஞ்சியுள்ள சிலரிடம், தம் போலி மதச்சார்பின்மையை பேசி, அவர்களை தாம் ஹிந்து என்று, எங்கும், எதிலும் காட்டிக் கொள்ளாதபடி, 'அது தான் மதச்சார்பின்மை' என்று நடந்து கொள்ளும்படியும் பழக்கி விடுவர்.மீதி யாராவது இருந்து, அவர், ஹிந்து மத சம்பிரதாயங்களை, தானுண்டு, தன் நம்பிக்கையுண்டு என, வெளிப்படையாகப் பின்பற்றிக் கொண்டிருந்தால், அவருக்கு மதவாதி என்ற முத்திரை குத்தி, ஒதுக்கி விடுவர். ஆக மொத்தத்தில், ஹிந்து மதத்தைப் பற்றியும், அதன் பெருமை பற்றியும், அடிப்படை ஞானமும், கொள்கைப் பிடிப்பும், பெருமித உணர்வும் இல்லாத சில அப்பாவி ஹிந்துக்கள், இந்த போர்வையாளர்கள் விதைத்த பிரிவினை எண்ணங்களால் குழம்பிப் போய், சிதறுண்டு போகின்றனர்.

எனவே, போர்வையாளர்களின் சதி வலையில் சிக்காமல் இருக்க, இன்றைய தேவை, ஹிந்துக்களிடையே விழிப்புணர்வு, ஒற்றுமை மட்டுமே. ஹிந்துக்கள் அனைவரும், ஹிந்து மத நுால்களையும், பக்தித் தமிழ் இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தும், பெரியோர்களிடம் கேட்டும், ஹிந்து மதத்தின் தொன்மை, மேன்மை, பெருமை மிகுந்த, நீண்ட வரலாற்றை சரியாக, தெளிவாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஹிந்து மத தத்துவங்கள் பற்றிய சரியான புரிதலையும், ஹிந்து மதத்தைக் காக்கும் விழிப்புணர்வையும், ஒற்றுமையுணர்வையும், ஹிந்துக்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.ஆபத்தான போர்வையாளர்களின் விஷமத்தனமான கருத்துகளுக்கும், அரைவேக் காட்டுத்தனமான சமூக வலைதள உளறல்களுக்கும், உடனுக்குடன் தக்க, தெளிவான பதிலடி கொடுக்க வேண்டும். தம் பேச்சுத் திறமையால், அப்பாவி ஹிந்துக்களை மூளைச்சலவை செய்யும் இந்த போர்வையாளர்களைக் கண்டறிவதே, ஹிந்து மதத்தை, போர்வையாளர்களின் பேராபத்திலிருந்து மீட்பதற்கான முதல் படி!


ஏ.வி.ராமநாதன்,

சமூக ஆர்வலர்,

தொடர்புக்கு:
மொபைல்: 94456 83815
இ - மெயில்: avrexcel@gmail.comAdvertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
28-ஏப்-202108:43:17 IST Report Abuse
shyamnats எஸ் பாலாவால் மசூதி, மற்றும் சர்ச்களில் போய் உரக்க சொல்ல முடியுமா ? இந்து தர்மத்தை பற்றை தெரிந்து கொள்ளாமல் தப்பும் தவறுமாக கருத்து பதிவிட வேண்டாம்.
Rate this:
Cancel
25-ஏப்-202116:22:10 IST Report Abuse
ஆப்பு ஒண்ணுமே கத்துக் குடுக்காமல், மனசாட்சி இல்லாமல் குருதட்சிணை வாங்குன ஒரே ஆள் துரோணராத்தான் இருக்கும். அவருக்கும் அவரோட சிஷ்யர்களில் ஒருவரான தர்மர்தான் அஸ்வதாமா அதஹ என்று சத்தமாகவும், குஞ்சரஹ ந்னு மனசுக்குள்ளேயும் பேசி ஆப்பு வைத்தார். இதைவிட பெரிய ஞானத்தை திருக்குறள் உரைக்கிறது. தன்னெஞ்சறிவது பொய்யற்க.. பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும் நு. நமது அறம் அவர்களின் தர்மத்தை விட வெகு உயர்ந்தது. தமிழன் என்ற வகையில் மிகவும் பெருமைப் படுகிறேன். எனக்கு பொய்யுணர்த்திய இறைவன் வேண்டாம். மெய்யுணர்த்திய வள்ளுவன் போதும்.
Rate this:
25-ஏப்-202118:53:40 IST Report Abuse
ஆரூர் ரங்ஆமாம் அந்த தெய்வீகத் திருக்குறளைதான்🙏 உன் ஆதர்ச ஈவேரா தங்கதட்டில்😫 வைத்த மலம் என்றார்...
Rate this:
Kumar - Madurai,இந்தியா
26-ஏப்-202117:23:25 IST Report Abuse
Kumarதுரோணர் கடவுள் கிடையாது அவர் மனிதர் . ஆனாலும் மகா பாரதத்தை ஏற்றுக்கொண்டதர்க்கு நன்றி.மகா பாரத போர் தந்திரத்தை மறந்து போனதால் தான் ,இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் அடிமையாக இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி அல்ல 2 மணிக்கு அவர்கள் குண்டு போட்டால், நம் நாடு சரியாக அதிகாலை 5.30 மணிக்கு ஆப்பு வைக்கும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்....
Rate this:
Cancel
Kumar TT -  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-202116:17:31 IST Report Abuse
Kumar TT உண்மையை உரக்க சொல்லியுள்ளார். அனைத்தும் நானே எம்மிடமிருந்து தோன்றி எம்முள்ளே அடங்குகின்றன என்றே இறைவன் கூறுகிறார் அப்படி இருக்க பிரிவிணை என்பதே இல்லை. எப்போதும் எதிலும் அறைகுறையாக படிப்பவர்களாளே ஆபத்து உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X