ராஜஸ்தான் அணி வெற்றி ; கோல்கட்டா அணி ஏமாற்றம்

Updated : ஏப் 25, 2021 | Added : ஏப் 25, 2021 | |
Advertisement
மும்பை: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.மோரிஸ் திருப்பம்கோல்கட்டா

மும்பை: கோல்கட்டா அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



latest tamil news



இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.

மோரிஸ் திருப்பம்
கோல்கட்டா அணிக்கு சுப்மன் கில் (11), நிதிஷ் ராணா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. சக்காரியா 'வேகத்தில்' ராணா (22), சாம்சனிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். சுனில் நரைன் (6) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கேப்டன் இயான் மார்கன் (0), ரன் கணக்கைத் துவக்கும் முன், ரன் அவுட்டானார். திரிபாதி 36 ரன் எடுத்தார். போட்டியின் 18 வது ஓவரை வீசிய கிறிஸ் மோரிஸ் திருப்பம் தந்தார். 2வது பந்தில் ஆன்ட்ரி ரசல் (9), 4வது பந்தில் தினேஷ் கார்த்திக்கை (25) அவுட்டாக்கினார். கம்மின்ஸ் (10), ஷிவம் மாவி (5) ஏமாற்ற, கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் மட்டும் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் சாய்த்தார்.


latest tamil news



சாம்சன் நம்பிக்கை
அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு பட்லர் (5), ஜெய்ஸ்வால் (22) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஷிவம் துபே 22 ரன் எடுக்க, டிவாட்டியா 5 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டனுக்கு உரிய பொறுப்பான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்த ராஜஸ்தான் வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. மில்லரும் கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


latest tamil news



'ஹெல்மெட்' அடி
கம்மின்ஸ் வீசிய பந்து (1.5வது ஓவர்), ராஜஸ்தான் வீரர் பட்லர் 'ஹெல்மெட்' வலதுபக்க பகுதியில் தாக்கியது. உடனடியாக அருகே சென்ற கம்மின்ஸ் நலம் விசாரித்தார். உடனடியாக உள்ளே வந்த 'பிசியோதெரபிஸ்ட்' பட்லரை சோதித்தார். பிறகு வேறு 'ஹெல்மெட்' மாற்றி விட்டு பேட்டிங்கை தொடர்ந்தார் பட்லர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X